Sunday, August 24, 2014

The war against Hamas would continue- Nettanyahu

Israel PM Benjamin Nettanyahu retarated his policy against Gaza adding that he would continue the war against Hamas.

Tuesday, August 5, 2014

காசா விடயம் இராஜதந்திர ரீதியில் வெற்றி கொள்ளப்பட வேண்டும்.



காசாவிலிருந்து இஸ்ரேல் வாபஸ் பெற்றிருப்பதை அடிப்படையாக வைத்து இஸ்ரேல் பின்வாங்கி விட்டது என்ற அவசர முடிவுக்கு நாம் வந்துவிடக்கூடாது. யூதர்கள் எப்போதும் தருணம் பார்த்து கழுத்து அறுப்பவர்கள்;.

பலவீனத்தை அடையாளம் கண்டுகொள்வதற்காக அல்லது தற்போது பலஸ்தீனில் இஸ்ரேலுக்கு எதிராக இருக்கும் ஒருமித்த எதிர்ப்பை தகர்ப்பதற்கான பின்னணியை உருவாக்குவதற்காக அவர்கள் பின்வாங்கியிருக்கலாம்.

அரபுலக நாடுகளில் இன்று ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகளை பாருங்கள். முஸ்லிம்களுக்குள் இருக்கும் பிரிவுகள் மத்தியில் அந்தப் பிரச்சினை காணப்படுவது போன்று எமக்கு தோன்றுகின்றது. ஆனால், அந்தப் பிரிவினையை உருவாக்கியவர்கள் யார்? இன்று, சிரியா, ஈராக், யெமன், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இந்த பிரிவினை ஏற்படுத்தப்பட்டு விட்டது. பலஸ்தீனிலும் பத்தாஹ்- ஹமாஸ் என்று பிரிவினை காணப்பட்டது. இந்த பிரிவினை இருக்கும் வரைதான் உலக பொருளாதாரத்திலும், மத்திய கிழக்கின் ஆதிக்கத்திலும் ஏனைய நாடுகளுக்கு செல்வாக்குச் செலுத்தலாம். முதலாலித்து வாதத்தை ஆதரிக்கும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளும், சோசலிசவாதத்தை ஆதரிக்கும் ரஷ்யா, சீனா போன்ற நாடுகளும் இந்த விடயத்தில் கவனம் செலுத்தி வருகின்றன.

இதை புரிந்து வைத்திருக்கும் யூதர்கள் (பனூ இஸ்ரவேலர்கள்) அவர்களின் அந்த அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொடுக்கும் ஏஜென்டாக மத்திய கிழக்கில் செயற்படுவதைப் போன்று காட்டிக் கொள்கின்றது. முஸ்லிம்களை அழித்து தமது ஆதிக்கத்தை நிலைநாட்டும் யூதர்களின் நாட்டத்தை நிறைவேற்றுவதே இதன் நோக்கமாகும்.

இப்படியான ஒரு பின்னணியில் பிரிவினையை ஏற்படுத்தி ஆதிக்கம் செலுத்த இஸ்ரேல் மேற்கொண்ட முயற்சி பலஸ்தீனில் தோல்வி கண்டதாலேயே காசா மீது தாக்குதல் நடத்தப்பட்து. ஓரிரு மாதங்களுக்கு முன்னர் ஹமாஸ் தரப்புடன் இணைந்து ஐக்கிய அரசாங்கம் ஒன்றை அமைக்க மஹ்மூத் அப்பாஸ் ஒப்பந்தம் செய்து கொண்டார்.

இதன் மூலம் தம்மை நேரடியாகவே எதிர்கொள்ளும் ஹமாஸ் அமைப்பு பலஸ்தீனில் ஆதிக்கம் பெற்றுவிடும். அது தமக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்று கருதியே இஸ்ரேல் தனது இராணுவ நடவடிக்கையை முன்னெடுத்தது.

இந்த எண்ணம் இஸ்ரேலுக்கு இருக்கும் வரை காசா மீதான தனது பிடியை விட்டுக் கொடுக்காது என்பதே எனது கருத்து. இராணுவ ரீதியில் பின்வாங்கியிருப்பது உண்மையாக இருக்கலாம். ஆனால், இராஜதந்திர ரீதியில் காய்நகர்த்துவதில் யூதர்கள் வல்லவர்கள். அதற்கு ஏற்றால் போல் அவர்கள் சொல்வதை கேட்கக்கூடிய கட்டமைப்பு இன்று உலகில் உருவாக்ப்பட்டு விட்டது. ஐக்கிய நாடுகள் சபையாக இருந்தாலும், சர்வதேச நீதிமன்றமாக இருந்தாலும் சரி, பாதுகாப்புச் சபையாக இருந்தாலும் சரி. அனைத்துமே இவர்களின் அத்துமீறல்களை கண்டு கொள்வதாக தெரியவில்லை.

சர்வதேச சட்டத்தின் படி, தமது நாட்டு மக்களின் சுய பாதுகாப்புக்காக இராணுவ நடகடிக்கை மேற்கொள்ளலாம் என்ற ஒரு துருப்பை மாத்திரம் வைத்துக் கொண்டு ஹமாஸ் அமைப்பு தமு நாட்டின் மீது ரொக்கட் தாக்குதல் நடத்துவதால் தமது நாட்டு மக்களை அதிலிருந்து பாதுகாக்க வேண்டியிருப்பதாக கூறி இந்த அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.

இந்த அடக்கு முறை இராணுவரீதியில் வேண்டுமானால் நிறைவேறாமல் போயிருக்கலாம். இராஜதந்திர ரீதியில் பலஸ்தீனம் குறிப்பாக காசா பகுதி மேலும் இறுக்கப்படலாம். வடகொரியாவைப் போன்று தடைகள் விதிக்கப்படலாம். அதன்போது மனிதநேய உதவிகளைக் கூட மேற்கொள்ள முடியாத நிலையும் ஏற்பட வாய்ப்புண்டு. அப்படி நடந்தால் பட்டினியால் மக்கள் அவதிப்படுவார்கள். இடம்பெயர்வார்கள். பலஸ்தீன் ஆட்சிக்கு எதிராக குரலெழுப்புவார்கள். அதை பயன்படுத்தி மக்களை பாதுகாக்கின்றோம் என்ற காரணத்தை வைத்து மீண்டும் பலஸ்தீனுக்குள் மேற்கத்திய நாடுகள் ஊடுறுவலாம்.

இப்படியெல்லாம் நடந்துவிடக் கூடாது என்பதுதான் எம் அனைவரினதும் எதிர்பார்ப்பாகும். அப்படி நடக்காமல் இருக்க வேண்டுமானால், தற்போதைக்கு காசா விடயம் இராஜதந்திர ரீதியில் வெற்றி கொள்ளப்பட வேண்டும். இதற்கு அரபுலக நாடுகள் ஆதரவு வழங்க வேண்டும். மறுபுறத்தில் முஸ்லிம்களின் ஏக பிரார்த்தனையும், போராட்டமும் அதற்காகவே அமைந்திருக்க வேண்டும்.

அப்போதுதான் இந்த காசாவை பாதுகாக்க முடியும்.


இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கை ஒரு யுத்த குற்றம் - ஹியுமன் ரைட்ஸ் வோச்

காஸாவில் அப்பாவி பொதுமக்களை பலிகொண்டுவரும் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கையை ஹியுமன் ரைட்ஸ் வோச்; அமைப்பு சாடியுள்ளது. இந்த இராணுவ நடவடிக்கை ஒரு யுத்த குற்றமாகுமென்று அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இராணுவ நடவடிக்கையை நிறுத்துவதற்காக இஸ்ரேல் மீது அழுத்தம் கொடுக்குமாறு ஹியுமன் ரைட்ஸ் வோச் அமைப்பு இஸ்ரேலின் நேச நாடுகளை கேட்டுள்ளது. காஸாவில் நிராயுதபாணியான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதற்காக மாத்திரமன்றி ஆர்ப்பாட்டக்காரர்களை கொலை செய்தமைக்காகவும் இஸ்ரேல் பொறுப்புக் கூற வேண்டுமென்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், காஸாவில் பொதுமக்களை அழித்தொழிப்பதற்காக இஸ்ரேலிய படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமும் வன்மையாகக் கண்டித்துள்ளது. காஸாவின் நிலைமைகளை கண்டறிவதற்காக சென்றுள்ள செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் பீற்றர் மோரர் இன்று இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, பலஸ்தீன வெளிவிவகார அமைச்சர் றியாட் அல் மலிக்கி இஸ்ரேலுக்கு எதிராக யுத்த குற்ற வழக்கொன்றை சர்வதேச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.


இதேவேளை, காஸாவை அண்டிய பகுதிகளில் வசித்துவரும் இஸ்ரேலிய மக்களில் 75 சதவீதமானோர் வெளியிடங்களுக்குச் சென்று வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹமாஸ் பேராளிகள் நடத்தும் ரொக்கெட் தாக்குதல்களுக்கு அஞ்சி அவர்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறியிருப்பதாக மத்திய கிழக்கு ஊடகமொன்று கூறுகிறது.

Sunday, August 3, 2014

காசாவில் சமாதானத்தை நிலைநிறுத்துவது சாத்தியமா?

காசா மீதான சமாதான பேச்சுவார்த்தை வெற்றியளிக்க வேண்டுமானால் நான்கு விடயங்கள் மீது கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

1. மஹ்மூத் அப்பாஸ் தலைமையிலான பலஸ்தீன அதிகார சபையின்          கட்டுப்பாட்டின் கீழ் காசாவின் அதிகாரம் கொண்டுவரப்பட வேண்டும்.

2. காசாவின் எல்லைப்புற கடப்பு வழிகளும், துறைமுகங்களும் திறக்கப்பட     வேண்டும்.
3. காசா மீண்டும் கட்டியெழுப்பப் பட வேண்டும்.
4. ஆயுதமேந்திய பலஸ்தீன தரப்பின் (ஹமாஸ்) ஆயுதங்கள் சர்வதேச      கண்காணிப்பின் கீழ் கலையப்பட வேண்டும்.

இருந்தாலும், காசா விடயத்தில் பலஸ்தீன் அதிகார சபை நடந்து கொள்ளும் விதம் குறித்து இஸ்ரேலும், எகிப்தும் திருப்தியடையாது என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. காசாவின் அன்றாட நடவடிக்கையை பலஸ்தீன அதிகார சபை நிர்வகிக்கும் என்றாலும், ஹமாஸ் அமைப்புக்கு பதிலாக காசாவின் உயர்மட்ட அதிகார தரப்பாக அந்த அதிகார சபை செயற்படுமா இல்லையா என்பதில் அந்த நாடுகளுக்கு இன்னமும் சந்தேகம் இருந்து வருகின்றது.

அது ஒருபுறம் இருக்க காசாவும், மேற்குக் கரையும் மீள ஒன்றிணைக்கப்பட்டால், அது மஹ்மூத் அப்பாசின் அதிகாரத்தை மேலும் வலுவூட்டுவதாக அமைந்து விடும். இதன் மூலம் தமது பிரித்தாளும் கொள்கை தோல்வி காணலாம் என்று இஸ்ரேல் கருதுகின்றது. அதேநேரம், அப்பாஸ் காசாவில் இஸ்லாமிய ஆட்சியை தொடர்ந்தும் பேணுவதற்கு துணைநிற்பார் என்று எகிப்தின் இஸ்லாமிய எதிர்ப்பு ஆட்சியாளர்கள் கருதுகின்றனர். இதற்காக அப்பாஸ் மூலம் ஓரங்கப்பட்ட பலஸ்தீனத்திற்கு எதிராக செயற்பட்டு வரும் முஹம்மத் தஹ்லானை எகிப்து அரசாங்கம் ஊக்குவித்து வருகின்றது.


எனவே, காசாவில் சமாதானத்தை நிலைநிறுத்துவது சாத்தியம் என்றாலும், இஸ்ரேலினதும், எகிப்தினதும் அபிலாஷைகள் அதற்கு இடம் கொடுக்காது என்பதே உண்மை.

தென்னாபிரிக்காவில் ஆரம்பத்தில் நிற பேதத்தின் அடிப்படையில் ஆட்சி செய்த அரசாங்கத்தையும் விட இஸ்ரேல் மிகவும் மோசமானது

காசா மீது தொடர்ந்தும் தாக்குதல் நடத்துவதன் மூலம் இஸ்ரேல் பாரிய யுத்தக் குற்றமொன்றை புரிந்து வருவதாக பிரபல யூத அமெரிக்க சிந்தனையாளர் நோம் சொம்ஸ்;க்கி தெரிவித்துள்ளார்.

 சர்வதேச நாடுகளின் கண்டனங்களை கருத்திற்கொள்ளலாம் இஸ்ரேல் தொடர்ந்தும் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இதுவரை ஆயிரத்து 800 பலஸ்தீனர்கள் உயிரிழந்திருக்கின்றார்கள். 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
தென்னாபிரிக்காவில் ஆரம்பத்தில் நிற பேதத்தின் அடிப்படையில் ஆட்சி செய்த அரசாங்கத்தையும் விட இஸ்ரேல் மிகவும் மோசமானது என சொம்ஸ்க்கி தெரிவித்துள்ளார். காசாவில் வைத்தியசாலைகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதும் யுத்தக் குற்றமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இஸ்ரேல் மீது ஆயுதத் தடைகளை விதிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அல் கைதா அமைப்புக்கு எதிராக அமெரிக்கா எவ்வாறு செயற்பட்டதோ அவ்வாறே ஹமாசுக்கு எதிராக இஸ்ரேல் செயற்பட வேண்டும் - இஸ்ரேலிய அமைச்சர்

காசாவுக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள யுத்தத்தில் இஸ்ரேலின் இலக்கு தோல்வி கண்டிருப்பதாக அந்நாட்டு சுற்றுலாத் துறை அமைச்சர் உசி லந்தாவு தெரிவித்துள்ளார்.

 காசாவில் இஸ்ரேலிய படைவீரர்கள் பாரியளவில் இராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ள போதிலும், அரசாங்கம் எதிர்பார்த்த எந்தவொரு குறிக்கோளையும் அடைய முடியவில்லை என்றும், இஸ்ரேல் மீதான பலஸ்தீனர்களின் ஏவுகணைத் தாக்குதல்களை தடுத்த நிறுத்த முடியாதிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது விடயத்தில் பிரதமர் பென்ஜமின் நெட்டன்யாகூ கடைபிடிக்கும் கொள்கைகள் தவறாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஹமாஸ் தரப்பின் தாக்குதல்களால் ஏற்பட்டுள்ள இழப்புக்களின் அளவு குறித்து அவர் அதிர்ச்சி வெளியிட்டுள்ளார். செனல் 10 தொலைக்காட்சிக்கு பேட்டியளிக்கும் போது அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

இஸ்ரேலுக்கு மூலோபாய ரீதியில் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வரும் ஹமாஸ் தரப்பின் சுரங்கவழிப் பாதைகளுக:கு எதிராக இஸ்ரேல் நடவடிக்கை எடுக்க தவறியுள்ளதாகவும் லன்டாவு சாடியுள்ளார். இஸ்ரேல் தொடர்ந்தும் தோல்வியுற்றால் அதன் பலவீனம் அனைவருக்கும் தெரிந்து விடும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹமாஸ் தரப்பை அழித்தொழிக்கும் நடவடிக்கையை இஸ்ரேல் சரியாக நிறைவேற்ற தவறினால், அடுத்த முறை ஹமாஸ் அமைப்பு பெரியளவிலான கனரக ஏவகணைகளையும், இரசாயன ஆயுதங்களையும் பயன்படுத்த வாய்ப்புள்ளது என்று இஸ்ரேல் அமைச்சர் லந்தாவு தெரிவித்துள்ளார். அல் கைதா அமைப்புக்கு எதிராக அமெரிக்கா எவ்வாறு செயற்பட்டதோ அவ்வாறே ஹமாசுக்கு எதிராக இஸ்ரேல் செயற்பட வேண்டும் என்று இஸ்ரேலிய சுற்றுலாத் துறை அமைச்சர் கூறியிருக்கிறார்.

ஐ.எஸ்.ஐ.எஸ் கிளர்ச்சியாளர்களுக்கு ஏன் காசா மக்களுக்காக போராட முடியாது?


நம்மில் பலர் ஐ.எஸ்.ஐ.எஸ் கிளர்ச்சியாளர்களின் முன்னேற்றத்தை ஆதரித்து கருத்து வெளியிடுகி;ன்றார்கள். உண்மையில் அவர்கள் ஜிஹாத் போராளிகள்தானா என்பதில் என்னை சந்தேகம் கொள்ள வைத்துள்ளது. முஸ்லிம்களின் வாழ்வியலில், அவர்களின் இருப்பில், அவர்களுக்கு உண்மையான அக்கரை இருக்கின்றது என்று எனக்குத் தோன்றவில்லை.

 ஈராக், சிரியா ஆகிய இடங்களில் ஆதிக்கம் செலுத்தி அந்த அரசாங்கங்களையே நிலைகுலையச் செய்திருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் கிளர்ச்சியாளர்களுக்கு ஏன் காசா மக்களுக்காக போராட முடியாது? இவர்கள் ஏன் இன்னமும் அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகள் மீது அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் செயற்படவில்லை. குறைந்தது இஸ்ரேலுக்கு எதிராக அவர்கள் ஏன் கிளர்ந்தெழவில்லை. முஸ்லிம் நாடுகளை மாத்திரம் ஏன் அவர்கள் இலக்கு வைக்கிறார்கள்.

இவர்களின் குறிக்கோள் கிலாபத் ஆட்சியை நிறுவுதா அல்லது இருக்கும் ஸ்திரத்தன்மையையும் சீர்குலைப்பதா என்பது எனக்கு புரியவில்லை. ஈராக், சிரியா ஆகிய நாடுகளில் மட்டுமல்ல எகிப்திலும்தான் அராஜகம் நடக்கிறது. ஏன் இந்த ஐ.எஸ்.ஐ.எஸ் கிளர்ச்சியாளர்களர்களுக்கு இது தெரியவில்லை.

பஷர் அல் அசாதுக்கு எதிரான வெளிநாடுகளின் கூட்டு முயற்சி தோல்வி கண்டமை நம் அனைவருக்கும் தெரியும். இப்போது அந்த நாட்டை சீர்குலைக்க இப்படியொரு கிளர்ச்சிப்படை. இவர்களுக்கு ஒருபுறமிருந்து ஆயுத உதவி வேறு. மறுபுறத்தில் குர்திஷ் இனத்தவர்களின் எழுச்சி. தனிநாடு கோருகின்றார்கள். அதற்கு அமெரிக்காவும், இஸ்ரேலும் கோரஸ் எழுப்புகின்றன. ஈராக் அரசாங்கத்திற்கு எதிராகவே போராட முடிந்த ஐ.எஸ்.ஐ.எஸ் கிளர்ச்சியாளர்களுக்கு ஏன் இஸ்ரேலின் ஏஜன்டாக செயற்படும் குர்திஷ் பிராந்தியத்தை கட்டுப்படுத்த முடியாது.

முஸ்லிம் உலகம் இன்னமும் விழித்துக் கொள்ளவில்லை என்றுதான் இவரக்ள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.