இறுதித் தூதர் (ஸல்) அவர்களை
அவமதிக்கும் வகையில் அமெரிக்கா யூத இனத்தைச்சேர்ந்த ஷாம் பேசிலி என்ற திரைப்பட
இயக்குனர் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த டெர்ரி ஜோன்ஸ் என்ற கிறிஸ்தவ போதகர் ஆகிய
இருவரும் ஒன்றினைந்து திரைப்படம் ஒன்றை தயாரித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு 100 க்கும் மேற்பட்ட
யூதர்கள் நிதியுதவி அளித்துள்ளனர். இத்திரைப்படம் இதுவரை வெளியாகவில்லை. அதேவேளையில்
இத்திரைப்படத்தின் டிரைலர் காட்சிகள் யூ ட்யூபில் பதிவு ஏற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த திரைப்பட ட்ரைலர் வெளியாகியிருப்பதைத் தொடர்ந்து உலகம்
முழுவதும் முஸ்லிம் சமூக மக்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டு பல்வேறு
நாடுகளில் அமெரிக்காவை கண்டித்து பலவகையான போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இலங்கை, எகிப்து, லிபியா, யெமன், துனீசியா, பாகிஸ்தான், லெபனான்,சூடான், இந்தியா, மொராக்கோ, பலஸ்தீன், பங்களாதேஷ்,
ஈரான் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் அமெரிக்காவிற்கு
எதிராக வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்களை
முன்னெடுத்து வருகின்றனர்.
கெய்ரோவில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், பொலிஸாருக்கும்
இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்ட ஏராளமான மக்கள் காயமடைந்தனர். எகிப்தில் தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக
ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கெய்ரோவில் உள்ள கனடா தூதரகம்
பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த வாரம் மூடப்பட்டது என வெளிவிவகாரத்துறையின் செய்தி
தொடர்பாளர் ரிக் ரோத் தெரிவித்துள்ளார்.
யெமன் நாட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் அமெரிக்க தூதரகத்தில்
அத்துமீறி நுழைந்தனர். தூதரகத்தில் நுழைந்த மக்களை வெளியேற்ற பொலிஸ் முயன்ற
போதிலும் தோல்வியை தழுவியதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பொலிஸ் – மக்கள்
இடையே நிகழ்ந்த மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார். துனீசியாவில் அமெரிக்க தூதரகத்தை
மூட வலியுறுத்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்க கொடிகளை போராட்டத்தில்
ஈடுபட்ட மக்கள் எரித்தனர்.
இந்தியாவின் சார்பாக சென்னை அண்ணாசாலையிலுள்ள அமெரிக்க
தூதரகத்தை முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்தில் கலந்து கொண்ட 350 க்கும்
மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இப்போராட்டத்தில் “இத்திரைப்படத்தில் நடித்த 14 பேரை உலக நீதிபதிக்கு முன் நிறுத்தி தண்டனை கொடுக்க வேண்டும் , அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் அனைத்து முஸ்லிம்களிடமும்
பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் ,
இந்திய அரசு அமெரிக்க மற்றும் இஸ்ரேலுடனான தூதரக உறவை துண்டிக்க வேண்டும் ” என்று கோரிக்கைகள் எழுப்பப்பட்டன.
ஆத்திரமடைந்த லிபியா முஸ்லிம்கள் அமெரிக்க தூதரகத்திற்கு தீவைத்த
சம்பவம் 2 தினங்கள் முன்னார் நிகழ்ந்தது. இச்சம்பவத்தில் அமெரிக்க
தூதர் உற்பட நான்குபேர் கொல்லப்பட்டனர். இதனை அடுத்து லிபியாவை நோக்கி அமெரிக்க
கடற்படையின் ஏவுகணைகளை ஏந்திய போர் கப்பல்கள் லிபியாவின் பெங்காசிக்கு
அனுப்பப்பட்டுள்ளன. மேலும் கடற்படையின் ஒரு பிரிவும் அனுப்பப்பட்டுள்ளது.
லிபியாவில் உள்ள தூதரக அலுவலகங்களுக்கு பாதுகாப்பை
அதிகரிப்பதற்காகவே இந்நடவடிக்கை என்று அமெரிக்க அதிகாரி தெரிவித்துள்ளார். ஐரோப்பா
கடற்படை தளத்தில் இருந்து 50 உறுப்பினர்கள் அடங்கிய
கடற்படை குழு ஒன்று லிபியாவுக்கு சென்றுள்ளதாக அவர் தெரிவித்தார். போர்க் கப்பல்களில்
டெமொஹாக் ஏவுகணைகள் நிரம்பியுள்ளன. அமெரிக்க தூதரகத்தை தாக்கியவர்கள் மீது
தாக்குதல் நடத்த ஒபாமா அரசு உத்தரவிட்டால் இந்த போர்க் கப்பல்கள்
பயன்படுத்தப்படும் என கருதப்படுகிறது.
உலகம் முழுவதும் உள்ள தூதரக அலுவலகங்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்க
ஒபாமா உத்தரவிட்டுள்ளார். போர்க் கப்பல்களை அனுப்பியதுக் குறித்து பதிலளிக்க
பெண்டகன் செய்தித் தொடர்பாளர் ஜார்ஜ் லிட்டில் மறுத்துவிட்டார். ஆனால், அமெரிக்க படை முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துள்ளதாக
அவர் கூறினார்.
இன்று அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அமெரிக்க
கொன்சியுலேட்டுக்கு அருகில் கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் அந்தத் தூதரகம் மீது
போத்தல்களையும்,
பாதணிகளையும் வீசி தமது எதிர்ப்பை
வெளியிட்டனர். துர்க்கியின் இஸ்தான்பூல் உள்ளிட்ட பல நகரங்களிலும் இவ்வாறான
ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. அமெரிக்காவுடன் செய்து கொண்டுள்ள கூட்டு
உடண்படிக்கையை ரத்துச் செய்ய வேண்டும் என ஆப்கான் சட்டத்தரணிகள் அந்நாட்டு
அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.
உலகம் முழுவதும் அமெரிக்காவுக்கு எதிராக இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் வெடித்திருப்பதைத்
தொடர்ந்து இஸ்லாமிய உலகில் சுமார் 18
இடங்களில் தமது படையினர் தயார்நிலைப்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கப் பாதுகாப்புச்
செயலாளர் லியன் பெனட்டா தெரிவித்துள்ளார்.
அமெரிக்க தூதரகங்கள் மீதான தாக்குதலைத் தொடர்ந்து லிபியா மற்றும்
எகிப்து அதிபர்களுடன் ஒபாமா தொலைபேசியில் பேசினார். பாதுகாப்பு ஏற்பாடுகள்
குறித்தும் தூதர் மற்றும் மூன்று அமெரிக்க தூதரக அதிகாரிகளின் மரணம் தொடர்பான
விசாரணைக் குறித்தும் அவர் வினவினார்.
முஹம்மது நபி (ஸல்) அவர்களையும், இஸ்லாத்தையும்
அவமதிக்கும் திரைப்பட டிரைலரை வெளியிட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எகிப்து
அதிபர் முஹம்மது முர்ஸி கூறியுள்ளார்.
இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “முற்றிலும் வகுப்புவாதத்தின் அடிப்படையிலான விருப்பங்களே
இதன் பின்னணியில் அமைந்துள்ளன. புனித சின்னங்கள் மீதான தாக்குதலை அனைத்து
சமூகங்களும் எதிர்க்கின்றன. அத்துடன் நாட்டில் உள்ள பல்வேறு தூதரகங்கள் மற்றும்
நிறுவனங்களை பாதுகாக்கும் பொறுப்பும் அரசுக்கு உள்ளது. சட்டத்தை கையில் எடுக்கும்
அதிகாரத்தை மக்களுக்கு வழங்கவில்லை. மக்கள் சட்டத்தை மதிக்கவேண்டும்.” இவ்வாறு முர்ஸி கூறியுள்ளார்
இஸ்லாத்தின் இறுதித்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களை
இழிவுப்படுத்தும் விதமாக தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படத்தின் பின்னணியில் உள்ள மர்ம
முடிச்சுகள் இன்னமும் அவிழவில்லை. கலிபோர்னியாவில் வசிக்கும் இஸ்ரேல் வம்சாவழியைச்
சார்ந்த ஸாம் பசிலி என்பவன் தாம் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளதாகவும், கிறிஸ்தவ-யூத அமைப்புகளின் உதவியுடன் திரைப்படம்
தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் முன்னர் செய்திகள் வெளிவந்தன.
இஸ்லாம் ஓர் புற்றுநோய் என்றும்இ முஹம்மது நபியை மோசமாக
சித்தரித்தும் பசிலி ஊடகங்களுக்கு பேட்டியளித்ததாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால்
பசிலி என்பவன் போலி என்றும்இ இது ஒரு போலியான தகவல் என்றும் கூறி
இத்திரைப்படத்தின் கன்ஸல்டண்ட் என கூறும் ஸ்டீவ் க்ளீன் என்பவர் யுகுP செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
பசிலி தலைமறைவாகிவிட்டதாக முன்னர் செய்திகள் வெளியாகின.ஆனால், இது தொடர்பாக எ.எஃப்.பி செய்தியாளர்கள் நடத்திய
விசாரணையில் பசிலி என்பவர் கலிஃபோர்னியாவைச் சார்ந்த காப்டிக் கிறிஸ்தவர் என்பது
தெரியவந்துள்ளது. நகவ்லா பசிலி நகவ்லா என்ற 55
வயதான நபருக்குஇ பசிலியைக் குறித்து முதலில் வெளியான தகவல்களுக்கும் பொருத்தம்
இருப்பதாக எ.எஃப்.பி கூறுகிறது. ஆனால்,
பசிலி என்ற பெயரில் தான் தன்னை அறிமுகப்படுத்தவில்லை என்று நகவ்லா கூறுகிறான்.
நகவ்லா பசிலி மீது ஏற்கனவே போலி பெயர்களில் மோசடி நடத்தியது
தொடர்பாக வழக்குகள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் நகவ்லா அமெரிக்க
புலனாய்வு அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டுள்ளதாக இன்று பீ.பி.சி செய்தி
வெளியிட்டுள்ளது. தற்போது எழுந்துள்ள சர்ச்சைக்குரிய திரைப்படத்திற்கும், தனக்கும் எந்தத் தொடர்புமில்லை என அவர் கூறியிருக்கின்றார்.
இறைத்தூதரை அவமதிக்கும் ‘Innocent Muslims என்ற திரைப்படம் 2
மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் வெளியானது. ஆனால்இ எகிப்தில் ஒரு கிருஸ்தவ நபர், இத்திரைப்படத்தின் முக்கிய காட்சிகள் அடங்கிய 13 நிமிடங்கள் ஓடும் வீடியோவை அரபு மொழியில் மொழிமாற்றம்
செய்து யூ ட்யூபில் பதிவு ஏற்ற்றம் செய்துள்ளார். இதனைத்தொடர்ந்து எகிப்து, லிபியா உள்ளிட்ட நாடுகளில் மக்கள் பெரும் கொந்தளிப்பு
அடைந்தனர். தொடர்ந்து அமெரிக்க தூதரகங்கள் மீது தாக்குதல்களும் நடத்தப்பட்டன. யூத
லாபிதான் இத்திரைப்படத்தின் பின்னணியில் செயல்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும்
அமெரிக்காவில் ஃப்ளோரிடாவைச் சார்ந்த வலதுசாரி கிறிஸ்தவ பயங்கரவாதி டெர்ரி ஜோன்ஸ்
இத்திரைப்படத்தை தயாரித்த நபருடன் நெருங்கிய தொடர்புடையவன் என்பது
குறிப்பிடத்தக்கது.
இத்திரைப்படம் ஒரு சதித்திட்டம் என்று முஸ்லிம் அறிஞர்கள்
கூறுகின்றனர். இதனிடையே, திரைப்பட
தயாரிப்பாளர் தங்களை ஏமாற்றிவிட்டதாக இத்திரைப்படத்தில் நடித்தவர்கள் கூறுகின்றனர்.
இத்திரைப்படத்தின் கதையில் மாற்றம் செய்துள்ளார்கள் என்று திரைப்படத்தில் நடித்த
சிண்டி லிகோர்ஷியா கூறுகிறார்.
இதேநேரம், சமயங்களையும், புனிதச் சின்னங்களையும் அவமானப்படுத்தும் நடவடிக்கைகளை
குற்றச் செயலாக பிரகடனம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு எகிப்தின் தலைமை முப்தி
கலாநிதி அலி ஜூம்ஆ முகம்மத் ஐக்கிய நாடுகள் சபைக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இவர்
இது குறித்து அமெரிக்காவிலுள்ள பல்வேறு இஸ்லாமிய பேரவைகள், அமைப்புக்கள், சமூக நிலையங்கள் என்பவற்றுடன் பேசி வருகின்றார். குறிப்பாக
டெரி ஜோன்ஸ் போன்ற மக்கள் மத்தியில் பீதியைத் தூண்டி வெறுக்கத்தக்க உரைகளை ஆற்றி
வருவோருக்கு எதிராக வழக்குத் தாக்கல்களை மேற்கொள்வது குறித்து இவர்கள் கலந்துரையாடியிருக்கின்றனர்.
டெரி ஜோன்ஸ் போன்றவர்களின் வெறுக்கத்தக்க உரைகளைத் தொடர்ந்து இன்று உலகம்
முழுவதிலும் உள்ள முஸ்லிம்களை ஆத்திரம் கொள்ளச் செய்யும் வகையில் நபிகளாரை
இழிவுபடுத்தும் திரைப்படம் ஒன்றும் வெளியாகியிருக்கிறது.
இந்நிலையில், இவ்வாறான
இழிவுபடுத்தும் செயல்களை கண்டிக்குமாறு கோரி எகிப்திய தலைமை முப்தி ஐக்கிய
நாடுகளின் செயலாளர் நாயகத்திற்கு பிரேரனையொன்றை முன்வைக்கத் திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில், அமெரிக்கா
வெளியிட்ட இஸ்லாத்திற்கு எதிரான திரைப்படத்திற்கு ஐ.நா பொதுச் செயலாளர் பான்- கி- மூன்
கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது பற்றி பான்- கி- மூன் கூறுகையில், இந்த திரைப்படம் கொலை முயற்சிகளை ஊக்குவிப்பதற்காக
வேண்டுமென்றே உருவாக்கப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டினார்.
ஐ.நா உயர் பிரதிநிதி ஜார்ஜ் காம்பியோஇ இவ் விவகாரம் குறித்து
அமெரிக்க வெளிவிவகாரத்துறை அமைச்சர் கிளிண்டனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் தற்போது ஏற்பட்டுள்ள வெறுப்பான சூழ்நிலை, ஆபத்தான நிலைமை மற்றும் தாக்குதல்கள்இ மத அடிப்படையிலான
வன்முறைகள் ஆகியவை கவலை அளிப்பதாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஐ.நா பாதுகாப்பு சபையும், 15 நாடுகளின்
பிரதிநிதிகளும் இவ்வாறான வன்முறை சம்பவங்களுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது
குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment