சிரியாவின் கிழக்கு பகுதியில் உள்ள அல் துரைமிஷா கிராமத்தில்
நடத்தப்பட்ட தாக்குதல் கிளர்ச்சியாளர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அங்கு
சென்றுள்ள ஐக்கிய நாடுகள் கண்காணிப்புக்குழு தெரிவித்துள்ளது.
இந்த கிராமத்திற்கு நேரடியாக
சென்று தமது குழு கண்காணித்தாக குழுவின் அறிக்கை ஒன்றில் அதன் பேச்சாளர் சொசான் கொசே தெரிவித்துள்ளார்.
சிரியாவின் ஹமா நகரை அண்டிய அல் துரைமிஷா கிராமத்தில் பல பொது
மக்களை கொன்று காயப்படுத்திய பயங்கரவாதிகள் மீதே தாக்குதல் நடத்தியிருப்பதாக அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ள நிலையில் ஐக்கிய நாடுகள்
கண்காணிப்புக் குழுவின் இந்த கருத்து வெளியாகி இருக்கின்றது.
அல் துரெமிஷா கிராமத்தில் அரச படைகளால் கொல்லப்பட்டவர்களில்
சிலர் ஆயுதக் குழுக்களின் அங்கத்தவர்கள் என்பதை அரச எதர்ப்பு மூலங்களும் ஊர்ஜிதப்படுத்தியிருப்பதாக
சிரியாவின் சனா செய்திஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment