Sunday, June 17, 2012

மறுமை நாள் நெருங்கி விட்டது. விழித்தெழு என் சகோதரனே..



கடந்த சில வாரங்களில் நாம் அவதானித்த மட்டத்தின் அடிப்படையில், செவ்வாய் கிரகத்தின் கிழக்குத் திசை நோக்கிய நகர்வின் வேகம் குறைந்திருப்பதாக வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர். மேற்கிற்கும், கிழக்கிற்கும் இடையிலான நகர்வில் தாமதம் காணப்படுகின்றது. இந்த நிலைமை தொடர்ந்தால், அடுத்த மாதம் 30 ஆம் திகதியளவில் கிழக்கு நோக்கிய செவ்வாய்க் கிரக நகர்வு நின்றுவிடும் ஆபத்து இருப்பதாக நாசா விஞ்ஞானிகளின் கருத்தை மேற்கோள்காட்டி பத்திரிகை ஒன்று வெளியிட்ட செய்தி பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.

இவ்வாறான கிரக மாற்றம் தொடரும் பட்சத்தில், எதிர்வரும் ஓகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் எதிர்த்திசையான மேற்குத் திசையை நோக்கி செவ்வாய்க் கிரகம் நகரலாம். அதாவது சூரியன் மேற்கிலிருந்து உதயமாவதற்கான சாத்தியப்பாட்டை இது தோற்றுவிக்கும். இந்த வினோதமான எதிர்த்திசை நோக்கிய நிகழ்வானது இது வலஞ்சுழி இயக்கம் அழைக்கப்படுகின்றது. இவ்வாறு செயற்படும் போது பூமி உள்ளிட்ட அனைத்து கிரகங்களும் ஒரே திசை நோக்கி நகருவதோடு, சூரியம் மேற்கிலிருந்து உதயமாகும் வாய்ப்புக் காணப்படுகின்றது.

இந்த வினோத நிகழ்வு விரைவில் ஏற்படலாம். ஆனால், அது பற்றி தமக்கு சரியாக தெரியாது என விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கின்றனர்.

மேற்கில் சூரியன் உதிப்பது பற்றிய விடயம் ஹதீஸ்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இது மறுமை நாளின் பிரதான அடையாளங்களில் ஒன்றாகக் காணப்படுகின்றது. உலக அழவு நம்மை நெருங்கிக் கொண்டிருக்கின்றது. இவ்வாறு மேற்கில் சூரியன் உதயமானதன் பிறகு நாம் பாவமன்னிப்புக் கேட்பதிலோ, வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதிலோ எந்தப் பயனுமில்லை என்பதை நபிகளார் சுட்டிக்காட்டியிருகின்றார்கள்.

இஸ்லாமிய சகோதரர்களே ! மறுமை நாளுக்கு நாம் தயாராக வேண்டும். இது நிர்ப்பந்திக்கப்பட்ட காலகட்டம். இனியும் தாமதம் வேண்டாம். உங்கள் பாதங்கள் இறை பாதையில் செல்லட்டும்.

No comments: