கியூபாவிற்கு
மூன்று நாள் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் அந்நாட்டு ஜனாதிபதி
ராகுல் கஸ்ரோவிற்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று இடம்பெறுகிறது.
கியூப புரட்சி
மாளிகையில் இந்தச் சந்திப்பு இடம்பெறுகிறது.. இலங்கை ஜனாதிபதி கியூப புரட்சியின் தேசிய வீரராகக்
கருதப்படும் ஜோசே மேர்ட்டியின் தூபிக்கு சென்று இன்று முற்பகல் அஞ்சலி செய்யவுள்ளார்.
ஹவானாவில் அமைந்துள்ள ஜோசெ மேர்ட்டி நூதன சாலையையும் இவர் பார்வையிட இருக்கின்றார்.
பிறேசிலில்
நடைபெறவுள்ள றியோ சுற்றாடல் மாநாட்டில் உரைநிகழ்த்துவதற்கும் ஜனாதிபதி எதிர்பார்;த்துள்ளார். இந்த மாநாட்டிற்குப்
புறம்பாக ஜனாதிபதி இந்திய பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கை சந்தித்து பேசவுள்ளதாக இந்திய
ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

No comments:
Post a Comment