ஜனாதிபதி டெங்கு
ஒழிப்பு செயலணியை உடனடியாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்த சுகாதார அமைச்சர் மைத்ரிபால
சிறிசேன தீர்மானித்துள்ளார். இந்த விசேட கூட்டம் நாளைக் காலை 10 மணிக்கு நாராஹென்பிட்டியில்
உள்ள தேசிய இரத்த வங்கியின் மண்டபத்தில் நடைபெறவிருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த செயலணியுடன்
சம்பந்தப்பட்ட 12 அமைச்சுக்களின் செயலாளர்கள் உட்பட சிரேஷ்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தையில்
கலந்து கொள்ளவுள்ளனர். டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை திடீரென அதிகரித்திருப்பது
தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்படும் என்று சுகாதார அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் எமது
நிலையத்திற்கு தெரிவித்தார். தேசிய நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்ட
காலப்பகுதியில் ஏதாவது குறைபாடுகள் நிலவியதா? என்பது தொடர்பாகவும்
கண்டறியப்படவுள்ளது.
டெங்குக் காய்சலுடன்
வைரஸ் காய்ச்சலும் இந்ந நாட்களில் பரவி வருவதாக கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின்
பணிப்பாளர், விசேட வைத்தியர் ரத்னசிரி ஹேவகே தெரிவித்துள்ளார்.
இந்த நோய்களை வேறுபடுத்தி இனம் காணும் சிக்கலை வைத்தியசாலை எதிர்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வைரஸ் காய்ச்சலை
சரியாக இனங்காணும் வரை டெங்கு நோய்க்கான சிகிச்சை வழங்கப்படுவதாக பணிப்பாளர் குறிப்பிட்டார்.
தற்போது கொழும்பு றிச்வே சிறுவர் வைத்தியசாலையில் சுமார் ஆயிரத்து 600 டெங்கு நோயாளர்கள்
சிகிச்சை பெற்று வருகின்றார்கள். வைத்தியசாலையின் விடுதிகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. சில விடுதிகளில்
தங்கியிருக்கக்கூடிய நோயாளர்களின் எண்ணிக்கையையும் விட கூடுதலான நோயாளர்கள் இருப்பதாக
பணிப்பாளர் தெரிவித்தார்.
டெங்கு நோய்க்கான
சிகிச்சையைத் துரிதப்படுத்துவதாலும் இதற்காக வைத்தியர்கள் எடுக்கும் முயற்சியும் இடம்பெறும்
மரண எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த முடிந்துள்ளது. மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல்
இருப்பின் பிள்ளைகளை வைத்தியசாலைக்கு அழைத்து வருமாறு றிச்வே சிறுவர் வைத்தியசாலையின்
பணிப்பாளர் டொக்டர் ரத்னசிறி ஹேவகே தெரிவித்துள்ளார்.
இதேவேளை
டெங்கு நோய் ஒழிப்பு நடவடிக்கைகளில் அனைத்து மக்களையும் ஈடுபடுத்தும்
வகையில் ஊடக அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதற்கமைவாக அனைத்து அலைவரிசைகளின்
ஊடாக இது தொடர்பாக பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் எதிர்வரும் இரண்டு
வாரகாலப் பகுதிக்குள் நாளாந்தம் ஒலிபரப்ப நடவடிக்கை எடுக்குமாறு ஊடக மற்றும் தகவல்
துறை அமைச்சின் செயலாளர் டபிள்யு.பி.கணேகல அனைத்து ஊடகங்களுக்கும் அறிவித்துள்ளார்.

No comments:
Post a Comment