Saturday, June 16, 2012

Sri Lankan Air line, One World குழுமத்துடன் இணைவு


ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனமானது உலகில் தரம்மிக்க விமான சேவைகளை கொண்டுள்ள முன்னனியில் திகழும் வன்வேர்ல்ட் குழுமத்துடன் இணைகின்றது. இக்குழுமம் 150 நாடுகளில் 860 இடங்களுக்கு சேவையாற்றவென 13 எயார்லைன்ஸ் நிறுவனங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இரண்டாயிரத்து 500 விமானங்கள், 9 ஆயிரம் தடவைகள் சேவையில் ஈடுபடுத்தப்படுவதுடன் நாளொன்றுக்கு மில்லியன் கணக்கான பயணிகளை ஏற்றிச் செல்கின்றன.

இவ்வாறான பெரிய குழுமத்துடன் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இணைவதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பல நன்மைகளையும் சலுகைகளையும் பெற்றுக்கொடுக்கக்கூடியதாக இருக்கும் என ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவர் நிஸாந்த விக்கிரமசிங்க தெரிவித்தார். இது தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் நடைபெற்றது.

No comments: