Saturday, June 16, 2012

எகிப்திய பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான அந்நாட்டு இராணுவத்தின் தீர்மானத்தை முஸ்லீம் சகோதரத்துவ அமைப்பு நிராகரிக்கிறது


எகிப்திய பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான அந்நாட்டு இராணுவத்தின் தீர்மானத்தை முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு நிராகரித்துள்ளது. இந்த விடயம் குறித்து, சர்வஜன வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட வேண்டும் என அந்த  அமைப்பு வலியுறுத்தி இருக்கின்றது. பாராளுமன்றத்தில் அதிகப்படியான ஆசனங்களை தம்சவம் வைத்திருக்கும் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு நேற்று வெளியிட்டுள்ள செய்தியறிக்கையில் ஆபத்து மிக்க நாட்கள் எதிர்காலத்தில் உண்டு என தெரிவித்துள்ளது.

இந்த வார ஆரம்பத்தில் எகிப்திய உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைத் தொடர்ந்து பாராளுமன்றத்தைக் கலைப்பது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தலை எகிப்திய ஆளும் இராணுவ கவுண்சில் நேற்று வெளியிட்டிருந்தது.

No comments: