Saturday, July 19, 2014

15 இஸ்ரேலியப் படைவீரர்கள் பலி - ஹமாஸ் அறிவிப்பு

இஸ்ரேலுக்கு எதிரான யுத்தத்தில் தாம் 15 இஸ்ரேலியப் படைவீரர்களை கொன்றிருப்பதாக பலஸ்தீன் போராளிகள் தெரிவித்துள்ளனர். மேலும் மூன்று இராணுவ வாகனங்களை அழித்திருப்பதாகவும் ஹமாஸ்; அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இஸ்ரேலின் தென்பகுதியில் உள்ள எஸ்கோல் (நுளாமழட) பிரதேசத்தின் ஊடாக சுரங்க வழிமூலம் சென்று நடத்திய தாக்குதலில் ஆறு படைவீரர்கள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் தரப்பின் அல்-கஸ்சாம் படைப்பிரிவு தெரிவித்துள்ளது. மேலும் இரண்டு ஊடுருவல்களில் 7 இஸ்ரேலியப் படைவீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.



No comments: