Saturday, July 5, 2014

மியன்மாரின் மண்டலே நகரில் இனவாதிகள் முஸ்லிம்களின் பல கட்டடங்கள் மீது தீ வைப்பு

 மியன்மாரின் இரண்டாவது மிகப் பெரிய நகரமான மண்டலேயில் தீவிர இனவாதிகள் முஸ்லிம்களின் பல கட்டடங்கள் மீது தீ வைத்துள்ளனர். இதை 70 இற்கும் மேற்பட்ட பொலிசார் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். 

அண்மையில் இந்த நகரில் இடம்பெற்ற பதற்றம் காரணமாக உயிரிழந்த ஒரு பௌத்த நபரின் இறுதிக் கிரியைகளைத் தொடர்ந்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஒரு பாடசாலையும், பல ஏனைய கட்டடங்களும் தீக்கிரையாகியுள்ளன. இந்தக் கும்பல் தாக்குதல் நடத்துவதற்காக அன்றி குறிப்பிட்ட இறுதிக் கிரியை நிகழ்வில் பங்கேற்க வந்ததாகவே தாம் கருதியதால்தான் தாம் அந்த தீவிரவாதிகளை தடுக்க முயற்சிக்கவில்லை என்று மியன்மார் பிராந்திய பொலிஸ் அலுவலகத்தைச் சேர்ந்த யீ டுட் தெரிவித்துள்ளார்.  


http://www.presstv.ir/detail/2014/07/05/370062/mobs-attack-muslim-area-in-myanmar/

No comments: