காஸாவில் அப்பாவி பொதுமக்களை பலிகொண்டுவரும் இஸ்ரேலிய இராணுவ
நடவடிக்கையை ஹியுமன் ரைட்ஸ் வோச்;
அமைப்பு சாடியுள்ளது. இந்த இராணுவ
நடவடிக்கை ஒரு யுத்த குற்றமாகுமென்று அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவ நடவடிக்கையை நிறுத்துவதற்காக இஸ்ரேல் மீது அழுத்தம் கொடுக்குமாறு ஹியுமன் ரைட்ஸ்
வோச் அமைப்பு இஸ்ரேலின் நேச நாடுகளை கேட்டுள்ளது. காஸாவில் நிராயுதபாணியான பொதுமக்கள்
படுகொலை செய்யப்பட்டதற்காக மாத்திரமன்றி ஆர்ப்பாட்டக்காரர்களை கொலை செய்தமைக்காகவும்
இஸ்ரேல் பொறுப்புக் கூற வேண்டுமென்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம்,
காஸாவில் பொதுமக்களை அழித்தொழிப்பதற்காக
இஸ்ரேலிய படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமும் வன்மையாகக்
கண்டித்துள்ளது. காஸாவின் நிலைமைகளை கண்டறிவதற்காக சென்றுள்ள செஞ்சிலுவைச் சங்கத்தின்
தலைவர் பீற்றர் மோரர் இன்று இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை,
பலஸ்தீன வெளிவிவகார அமைச்சர்
றியாட் அல் மலிக்கி இஸ்ரேலுக்கு எதிராக யுத்த குற்ற வழக்கொன்றை சர்வதேச நீதிமன்றத்தில்
தாக்கல் செய்துள்ளார்.
இதேவேளை,
காஸாவை அண்டிய பகுதிகளில் வசித்துவரும்
இஸ்ரேலிய மக்களில் 75 சதவீதமானோர் வெளியிடங்களுக்குச் சென்று வசித்து
வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹமாஸ் பேராளிகள் நடத்தும் ரொக்கெட் தாக்குதல்களுக்கு
அஞ்சி அவர்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறியிருப்பதாக மத்திய கிழக்கு ஊடகமொன்று
கூறுகிறது.

No comments:
Post a Comment