Sunday, August 3, 2014

காசாவில் சமாதானத்தை நிலைநிறுத்துவது சாத்தியமா?

காசா மீதான சமாதான பேச்சுவார்த்தை வெற்றியளிக்க வேண்டுமானால் நான்கு விடயங்கள் மீது கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

1. மஹ்மூத் அப்பாஸ் தலைமையிலான பலஸ்தீன அதிகார சபையின்          கட்டுப்பாட்டின் கீழ் காசாவின் அதிகாரம் கொண்டுவரப்பட வேண்டும்.

2. காசாவின் எல்லைப்புற கடப்பு வழிகளும், துறைமுகங்களும் திறக்கப்பட     வேண்டும்.
3. காசா மீண்டும் கட்டியெழுப்பப் பட வேண்டும்.
4. ஆயுதமேந்திய பலஸ்தீன தரப்பின் (ஹமாஸ்) ஆயுதங்கள் சர்வதேச      கண்காணிப்பின் கீழ் கலையப்பட வேண்டும்.

இருந்தாலும், காசா விடயத்தில் பலஸ்தீன் அதிகார சபை நடந்து கொள்ளும் விதம் குறித்து இஸ்ரேலும், எகிப்தும் திருப்தியடையாது என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. காசாவின் அன்றாட நடவடிக்கையை பலஸ்தீன அதிகார சபை நிர்வகிக்கும் என்றாலும், ஹமாஸ் அமைப்புக்கு பதிலாக காசாவின் உயர்மட்ட அதிகார தரப்பாக அந்த அதிகார சபை செயற்படுமா இல்லையா என்பதில் அந்த நாடுகளுக்கு இன்னமும் சந்தேகம் இருந்து வருகின்றது.

அது ஒருபுறம் இருக்க காசாவும், மேற்குக் கரையும் மீள ஒன்றிணைக்கப்பட்டால், அது மஹ்மூத் அப்பாசின் அதிகாரத்தை மேலும் வலுவூட்டுவதாக அமைந்து விடும். இதன் மூலம் தமது பிரித்தாளும் கொள்கை தோல்வி காணலாம் என்று இஸ்ரேல் கருதுகின்றது. அதேநேரம், அப்பாஸ் காசாவில் இஸ்லாமிய ஆட்சியை தொடர்ந்தும் பேணுவதற்கு துணைநிற்பார் என்று எகிப்தின் இஸ்லாமிய எதிர்ப்பு ஆட்சியாளர்கள் கருதுகின்றனர். இதற்காக அப்பாஸ் மூலம் ஓரங்கப்பட்ட பலஸ்தீனத்திற்கு எதிராக செயற்பட்டு வரும் முஹம்மத் தஹ்லானை எகிப்து அரசாங்கம் ஊக்குவித்து வருகின்றது.


எனவே, காசாவில் சமாதானத்தை நிலைநிறுத்துவது சாத்தியம் என்றாலும், இஸ்ரேலினதும், எகிப்தினதும் அபிலாஷைகள் அதற்கு இடம் கொடுக்காது என்பதே உண்மை.

No comments: