Tuesday, August 5, 2014

காசா விடயம் இராஜதந்திர ரீதியில் வெற்றி கொள்ளப்பட வேண்டும்.



காசாவிலிருந்து இஸ்ரேல் வாபஸ் பெற்றிருப்பதை அடிப்படையாக வைத்து இஸ்ரேல் பின்வாங்கி விட்டது என்ற அவசர முடிவுக்கு நாம் வந்துவிடக்கூடாது. யூதர்கள் எப்போதும் தருணம் பார்த்து கழுத்து அறுப்பவர்கள்;.

பலவீனத்தை அடையாளம் கண்டுகொள்வதற்காக அல்லது தற்போது பலஸ்தீனில் இஸ்ரேலுக்கு எதிராக இருக்கும் ஒருமித்த எதிர்ப்பை தகர்ப்பதற்கான பின்னணியை உருவாக்குவதற்காக அவர்கள் பின்வாங்கியிருக்கலாம்.

அரபுலக நாடுகளில் இன்று ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகளை பாருங்கள். முஸ்லிம்களுக்குள் இருக்கும் பிரிவுகள் மத்தியில் அந்தப் பிரச்சினை காணப்படுவது போன்று எமக்கு தோன்றுகின்றது. ஆனால், அந்தப் பிரிவினையை உருவாக்கியவர்கள் யார்? இன்று, சிரியா, ஈராக், யெமன், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இந்த பிரிவினை ஏற்படுத்தப்பட்டு விட்டது. பலஸ்தீனிலும் பத்தாஹ்- ஹமாஸ் என்று பிரிவினை காணப்பட்டது. இந்த பிரிவினை இருக்கும் வரைதான் உலக பொருளாதாரத்திலும், மத்திய கிழக்கின் ஆதிக்கத்திலும் ஏனைய நாடுகளுக்கு செல்வாக்குச் செலுத்தலாம். முதலாலித்து வாதத்தை ஆதரிக்கும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளும், சோசலிசவாதத்தை ஆதரிக்கும் ரஷ்யா, சீனா போன்ற நாடுகளும் இந்த விடயத்தில் கவனம் செலுத்தி வருகின்றன.

இதை புரிந்து வைத்திருக்கும் யூதர்கள் (பனூ இஸ்ரவேலர்கள்) அவர்களின் அந்த அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொடுக்கும் ஏஜென்டாக மத்திய கிழக்கில் செயற்படுவதைப் போன்று காட்டிக் கொள்கின்றது. முஸ்லிம்களை அழித்து தமது ஆதிக்கத்தை நிலைநாட்டும் யூதர்களின் நாட்டத்தை நிறைவேற்றுவதே இதன் நோக்கமாகும்.

இப்படியான ஒரு பின்னணியில் பிரிவினையை ஏற்படுத்தி ஆதிக்கம் செலுத்த இஸ்ரேல் மேற்கொண்ட முயற்சி பலஸ்தீனில் தோல்வி கண்டதாலேயே காசா மீது தாக்குதல் நடத்தப்பட்து. ஓரிரு மாதங்களுக்கு முன்னர் ஹமாஸ் தரப்புடன் இணைந்து ஐக்கிய அரசாங்கம் ஒன்றை அமைக்க மஹ்மூத் அப்பாஸ் ஒப்பந்தம் செய்து கொண்டார்.

இதன் மூலம் தம்மை நேரடியாகவே எதிர்கொள்ளும் ஹமாஸ் அமைப்பு பலஸ்தீனில் ஆதிக்கம் பெற்றுவிடும். அது தமக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்று கருதியே இஸ்ரேல் தனது இராணுவ நடவடிக்கையை முன்னெடுத்தது.

இந்த எண்ணம் இஸ்ரேலுக்கு இருக்கும் வரை காசா மீதான தனது பிடியை விட்டுக் கொடுக்காது என்பதே எனது கருத்து. இராணுவ ரீதியில் பின்வாங்கியிருப்பது உண்மையாக இருக்கலாம். ஆனால், இராஜதந்திர ரீதியில் காய்நகர்த்துவதில் யூதர்கள் வல்லவர்கள். அதற்கு ஏற்றால் போல் அவர்கள் சொல்வதை கேட்கக்கூடிய கட்டமைப்பு இன்று உலகில் உருவாக்ப்பட்டு விட்டது. ஐக்கிய நாடுகள் சபையாக இருந்தாலும், சர்வதேச நீதிமன்றமாக இருந்தாலும் சரி, பாதுகாப்புச் சபையாக இருந்தாலும் சரி. அனைத்துமே இவர்களின் அத்துமீறல்களை கண்டு கொள்வதாக தெரியவில்லை.

சர்வதேச சட்டத்தின் படி, தமது நாட்டு மக்களின் சுய பாதுகாப்புக்காக இராணுவ நடகடிக்கை மேற்கொள்ளலாம் என்ற ஒரு துருப்பை மாத்திரம் வைத்துக் கொண்டு ஹமாஸ் அமைப்பு தமு நாட்டின் மீது ரொக்கட் தாக்குதல் நடத்துவதால் தமது நாட்டு மக்களை அதிலிருந்து பாதுகாக்க வேண்டியிருப்பதாக கூறி இந்த அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.

இந்த அடக்கு முறை இராணுவரீதியில் வேண்டுமானால் நிறைவேறாமல் போயிருக்கலாம். இராஜதந்திர ரீதியில் பலஸ்தீனம் குறிப்பாக காசா பகுதி மேலும் இறுக்கப்படலாம். வடகொரியாவைப் போன்று தடைகள் விதிக்கப்படலாம். அதன்போது மனிதநேய உதவிகளைக் கூட மேற்கொள்ள முடியாத நிலையும் ஏற்பட வாய்ப்புண்டு. அப்படி நடந்தால் பட்டினியால் மக்கள் அவதிப்படுவார்கள். இடம்பெயர்வார்கள். பலஸ்தீன் ஆட்சிக்கு எதிராக குரலெழுப்புவார்கள். அதை பயன்படுத்தி மக்களை பாதுகாக்கின்றோம் என்ற காரணத்தை வைத்து மீண்டும் பலஸ்தீனுக்குள் மேற்கத்திய நாடுகள் ஊடுறுவலாம்.

இப்படியெல்லாம் நடந்துவிடக் கூடாது என்பதுதான் எம் அனைவரினதும் எதிர்பார்ப்பாகும். அப்படி நடக்காமல் இருக்க வேண்டுமானால், தற்போதைக்கு காசா விடயம் இராஜதந்திர ரீதியில் வெற்றி கொள்ளப்பட வேண்டும். இதற்கு அரபுலக நாடுகள் ஆதரவு வழங்க வேண்டும். மறுபுறத்தில் முஸ்லிம்களின் ஏக பிரார்த்தனையும், போராட்டமும் அதற்காகவே அமைந்திருக்க வேண்டும்.

அப்போதுதான் இந்த காசாவை பாதுகாக்க முடியும்.


No comments: