Saturday, October 12, 2013

Syrian Forces retakes 40 villages

சிரிய இராணுவம் 40 கிராமங்களின் அதிகாரத்தை முழுமையாக தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருப்பதாக ஈரானிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதனை அடுத்து ஹமா நகருக்கும், அலப்போ நகருக்கும் இடையிலான வீதி திறக்கப்பட்டுள்ளது. இந்த கிராமங்களின் அதிகாரத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு முன்னர் படையினர் கிளர்ச்சியாளர்களுடன் கடுமையாக மோதியுள்ளனர். டமஸ்கஸ் நகருக்கு அருகிலுள்ள தல்பித்தா மற்றும் அல் ஜொரொத் ஆகிய கிராமங்களையும் சிரிய அரச படையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்த இராணுவ நடவடிக்கையின் போது தக்பிரி கிளர்ச்சிக்குழுவைச் சேர்ந்த பலர் கொல்லப்பட்டதாக இராணுவம் அறிவித்துள்ளது.

அண்மைக்காலமாக சிரிய இராணுவம் கிளர்;ச்சியாளர்களிடமிருந்து பல நகரங்களை மீட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, வகையில் சிரியாவை அழிக்கும் நோக்குடன் நவ பழமைவாதிகளைக் கொண்ட ஒரு கடும்போக்கு அமைப்பை இஸ்ரேலும், சவுதி அரேபியாவும் உருவாக்கியிருப்பதாக மத்திய கிழக்கு தொடர்பான நிபுணர் கெவின் பெரட் தெரிவித்துள்ளார். இது இஸ்ரேலின் அபிலாஷைகளை நிவர்த்தி செய்வதாக அமையும் என்பது அவரின் கருத்தாகும். குறிப்பாக இவ்விரு நாடுகளும் அமெரிக்காவுக்கு ஆதரவளித்து வருகின்றன. இதன் மூலம் சிரியா மூன்று கூறுகளாக பிளவுபடும் ஆபத்து இருப்பதாக அவர் கூறியுள்ளார்.  சிரியாவில் இடம்பெறும் வன்முறைகள் குறித்து மேற்கத்தேய ஊடகங்கள் மௌனம் காப்பது குறித்தும் நிபுனர் கெவின் பெரட் விமர்சித்துள்ளார்.

சிரியாவில் அரசுக்கு எதிரான புரட்சி படையினருக்கு ஆப்கானிஸ்தானில் இரசாயன ஆயுத பயிற்சி அளிக்கப்படுவதாக ரஷ்யா குற்றம் சுமத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் அந்நாட்டு அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத பகுதிகளில் அல்கொய்தாவுடன் தொடர்புடைய அல்நஸ்ரா என்ற அமைப்புக்கு இரசாயன ஆயுத பயிற்சியை அளித்து வருவதாக ரஷ்ய வெளிவிவகாரத்துறை அமைச்சர் செர்ஜி லேவ்ரவ் தெரிவித்துள்ளார்.


ஆனால் எந்த இடத்தில் யார் பயிற்சி அளிக்கிறார்கள் என்பது குறித்து குறிப்பிடவில்லை.

No comments: