Saturday, October 12, 2013

யாசிர் அரபாத் நஞ்சூட்டிக் கொல்லப்பட்டார் - பிரித்தானிய மருத்துவ சஞ்சிகை


பலஸ்தீன் விடுதலை அமைப்பின் முன்னாள் தலைவர் மர்ஹ_ம் யாசிர் அரபாத் நஞ்சூட்டிக் கொல்லப்பட்டார் என்ற ஆரம்ப ஆய்யு முடிவுகளை ஆதரிக்கும் வகையில் பிரித்தானிய மருத்துவ சஞ்சிகையான லன்சட்டும் கருத்து வெளியிட்டுள்ளது. கதிரியக்க மூலக்கூறான பொலோனியம் 210 என்ற நஞ்சு ஊட்டப்பட்டு அரபாத் கொல்லப்பட்டதாக அந்த சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது. கடந்த வருடம் சுவிஸ் விஞ்ஞானிகள் அரபாத்தின் மரணம் குறித்து ஆய்து செய்து தகவல் வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக, யாசிர் அரபாத்தின் இரத்தம், சிறுநீர் ஆகியவற்றிலும், அவரின் உடைகள் மற்றும் பற்தூரிகையிலும் கதிரியக்க மூலக்கூறுகள் கூடுதலாக கூடுதலாக காணப்பட்டதென ஆரம்ப ஆய்வு முடிவுகள் தெரிவித்திருந்தன. இவரின் மரணம் தொடர்பான மர்மம் குறித்து ஆராய்வதற்கென, கடந்த வருடம் நவம்பர் மாதம் அவரின் ஜனாசா தோண்டி எடுக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.


யாசிர் அரபாத் 2004ஆம் ஆண்டில் தனது 75 ஆவது வயதில் பரிசில் உள்ள இராணுவ வைத்திய சாலையொன்றில் வைத்து உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. 

No comments: