Saturday, October 12, 2013

பைலின் சூறாவளி எந்த சந்தர்ப்பத்திலும் ஒரிஸ்ஸ மாநிலத்தின் கோப்பால்பூர் பகுதியை அண்மிக்கலாம்

பைலின் சூறாவளி எந்த சந்தர்ப்பத்திலும் ஒரிஸ்ஸ மாநிலத்தின் கோப்பால்பூர் பகுதியை அண்மிக்கலாம் என இந்திய வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

மணிக்கு 235 கிலோ மீற்றர் வேகத்தில் இந்தக் காற்று வீசலாம் என அந்தத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு இதன் தாக்கம் காணப்படும். குறிப்பாக ஒரிஸ்ஸ மற்றும் ஆந்திரப்பிரதேஷ் மாநிலங்களில் இதன் தாக்கம் உணரப்படலாம் என நம்பப்படுகிறது.

இதுவரை ஐந்து லட்சத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

பைலின் சூறாவளி காரணமாக இலங்கைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாதென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. சப்ரகமுவ, மத்திய, மற்றும் தென்மாகாணங்களில் இன்றிரவு இடையிடையே மழைபெய்யும். சில இடங்களில் கடும் மழையை எதிர்பார்க்கலாம். நாளைய தினமும் இந்த மாகாணங்களில் ஆங்காங்கு மழைபெய்யும்.

மத்திய மலைநாட்டின் மேற்குத் தாழ்வாரப் பகுதிகளிலும் நாட்டைச் சுற்றியுள்ள கடற்பிரதேசங்களிலும் ஓரளவு கடுங்காற்று வீசலாம்.



No comments: