Saturday, October 12, 2013

கென்ய மற்றும் சூடான் ஜனாதிபதிபகள் மீதான விசாரனைகளை பிற்போடுமாறு ஆபிரிக்க நாடுகள் வலியுறுத்தல்

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தொடர்பாக ஆராயும் மாநாடு இன்று எதியோப்பிய தலைநகர் அதிஸ் அபாபாவில் ஆரம்பமானது. இதில் ஆபிரிக்க நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். ஆபிரிக்க பிராந்தியத்திய நாடுகளின் தலைவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டாம் என அவர்கள் அங்கு வலியுறுத்தியுள்ளனர். எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள கென்ய மற்றும் சூடான் ஜனாதிபதிபகள் மீதான விசாரனைகளை; பிற்போடுமாறும் அந்த நாடுகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை வலியுறுத்தியுள்ளன. ஹக் நகரை தளமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இவ்விரு ஜனாதிபதிகளுக்கும் எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது. இந்த நீதிமன்றம் நியாயத்துக்கு முறனாக நடந்து கொள்கின்றது என்று ஆபிரிக்க தலைவர்கள் நீண்டகாலமாக கூறி வருகின்றனர்.


கென்யாவில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதிக்கு அவரின் அரசியலமைப்பு ரீதியான கடமைகளை நிறைவேற்றும் வகையில், அவருக்கு எதிரான வழக்கு விசாரணைகளை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உடனடியாக பிற்படுத்த வேண்டும் என ஆபிரிக்க ஒன்றிய நாடுகளின் நிறைவேற்று கவுன்சிலின் தலைவர் த்லமினி சுமா வலியுறுத்தியுள்ளார்.

No comments: