ரிஹானா என்ற பெயரில் இசை மேடைகளில் தன்னை அறிமுகப்படுத்தி வரும் ரொபின் ரிஹானா பென்டி என்ற பெண்தான் இவர். பார்படோஸ் நாட்டைச் சேர்ந்த இவர் ஒரு பாடகி, நடிகை மற்றும் நவநாகரிக வடிவமைப்பாளர்.
இவர் இப்போது செய்திருக்கும் அசிங்கமான வேலை என்ன தெரியுமா? தனது நவநாகரிக வடிவை எடுத்துக் காட்டுவதற்காக அபுதாபியின் ஷேக் செய்யத் பெரிய பள்ளிவாசல் முன் நின்று கொண்டு புகைப்படம் எடுத்திருப்பதுதான். அதிலும் இருக்கமான கவர்ச்சியை வெளிப்படுத்தும் உடையை அணிந்து எடுத்திருக்கும் இந்த புகைப்படத்தைப் பற்றி பலரும் பல விதமாக கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.
இந்தப் பள்ளிவாசல் சுற்றுலாக் கவர்ச்சிமிக்க பகுதியில் அமைந்திருந்தாலும், அதற்கு முன்பாக நின்றுகொண்டு அதன் புனிதத்தை கெடுப்பதென்பது ஏற்றுக் கொள்ள முடியாததாகும் என்று அந்த நடிகையின் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.


No comments:
Post a Comment