பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவத்திற்கான பொதுநலவாய சங்கம்
என்றால் என்ன? பொதுநலவாய அமைப்பின் ஊடாக பொதுநிர்வாகத்தை ஸ்திரப்படுத்தி
ஜனநாயகத்தையும், நல்லாட்சியையும் உருவாக்குவதற்காக முன்னின்று
செயற்படும் ஒரு அமைப்புத்தான் பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவத்திற்கான பொதுநலவாய
சங்கம்.
பொதுநலவாய அமைப்பில் வலையமைப்புக்களை உருவாக்கி இந்த இலக்கை அடைந்து கொள்ள
இந்த சங்கம் முயற்சிக்கின்றது. பொது நிர்வாகத்தின் புதிய அபிவித்திகள், புதுமைகள் மற்றும் திருத்தங்கள் தொடர்பான அனுபவங்களை இந்த சங்கம்
பரிமாறிக் கொள்கின்றது.
இது குறித்து அடிக்கடி உலகின் பல்வேறு நாடுகளிலும் ஒன்றுகூடி
கலந்துரையாடப்படுகின்றது.
கடந்த வருடம் ஒக்டோபர் 24ஆம்
திகதி முதல் 26ஆம் திகதி வரை இந்தியாவின் புதுடில்லியில் பொது
நிர்வாகம் தொடர்பான பொதுநலவாய மாநாடும், அமைச்சர்களின்
மன்றமும் இடம்பெற்றது. பொதுச் சேவை ஆய்வு மற்றும் புதுமை பற்றி கடந்த மார்ச் மாதம்
தென்னாபிரிக்காவில் கூடி ஆராயப்பட்டது.
பொதுநலவாய செயலகம் இலங்கை அரச நிர்வாக மற்றும் உள்துறை அமைச்சுடனும், பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவத்திற்கான பொதுநலவாய சங்கத்துடனும்
இணைந்து கடந்த வருடம் மே மாதம் 8ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை கொழும்பில் ஒரு விசேட மாநாடொன்றை நடத்தியிருந்தது.
சிறந்த பொதுச் சேவைக்கான தலைமைத்துவம் என்ற தலைப்பின் கீழ் அந்த மாநாடு நடைபெற்றது.
பொதுத் துறையின் நிர்வாகத்திற்குரிய புதிய அனுகுமுறைகள் குறித்து
எதிர்வரும் 27ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை மலேஷியாவில் கூடி ஆராயப்படவுள்ளது.

No comments:
Post a Comment