Sunday, July 1, 2012

அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுமாறு கோரி பஹ்ரைன் முழுவதும் ஆர்ப்பாட்டம்


அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுமாறு கோரி பஹ்ரைன் முழுவதும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. ஆர்ப்பாட்டங்களை அடக்குவதற்கு சவுதியின் ஆதரவுடன் செயற்படும் படையினர் நடவடிக்கை எடுத்து வருகின்ற போதிலும் பஹ்ரைன் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தொடர்கின்றன.

நாட்டு மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்கும் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கம் ஒன்று அவசியம் என்பதையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தி இருக்கிறார்கள். கடந்த வருடம் பெப்ரவரி மாதம் ஆரம்பித்த அரசுக்கு எதிரான கிளர்ச்சியில் பல ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டமைக்கு மன்னர் ஹமத் பின் இஷா அல் கலிபா பொறுப்புக் கூற வேண்டும் என அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

No comments: