Sunday, July 1, 2012

சிரியாவுடனான எல்லைப் பகுதியில் துருக்கி யுத்த விமானங்கள்


துருக்கி அரசாங்கம் தமது ஆறு எப்-16 ரக போர் விமானங்களை சிரியாவுடனான எல்லைப் பகுதிக்கு அருகில் சேவையில் ஈடுபடுத்தியுள்ளது. தமது எல்லைப் பகுதிக்கு அருகில் சிரிய வானூர்திகள் வந்ததை அடுத்து இந்த போர் விமானங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக துருக்கி இராணுவம் தெரிவித்துள்ளது.

 எவ்வாறாயினும் எல்லைப் பகுதியில் எந்த வன்முறைகளும் இடம்பெறவில்லை என அந்த இராணுவத்தின் கூற்றொன்றை மேற்கோள் காட்டி ரொய்ட்டர் செய்தி ஸ்தாபனம் தெரிவித்திருகிறது. கடந்த மாதம் சிரிய படைகள் தமது எல்லைப் பகுதியில் வைத்து துருக்கி போர் விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான முறுகல் நிலை தீவிரமடைந்துள்ளது.

No comments: