Sunday, July 8, 2012

லிபியாவில் நடைபெற்ற முதலாவது பாராளுமன்ற ஜனநாயக தேர்தலில் தேசிய படைகள் கூட்டணி முன்னிலையில்


லிபியாவில் நடைபெற்ற முதலாவது பாராளுமன்ற ஜனநாயக தேர்தலில் முன்னாள் பிரதமர் மஹமுட் ஜிப்ரைல் தலைமையிலான தேசிய படைகள் முன்னணி முன்னணி வகிப்பதாக ஆரம்ப தேர்தல் முடிவுகள் கூறுகின்றன. தொடர்ந்தும் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

 உத்தியோகப+ர்வமான முடிவுகள் எதிர்வரும் புதன்கிழமை வெளியிடப்படவுள்ளது.

200 ஆசனங்களைக் கொண்ட சட்டசபை உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான லிபிய பாராளுமன்றத் தேர்தலில் 585 பெண்கள் உட்பட மூவாயிரத்து 700 பேர் போட்டியிடுகின்றனர். இதன் மூலம் தற்காலிக சட்டசபையை உருவாக்கி அமைச்சரவையையும், பிரதமரையும் தெரிவு செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது. பொது தேசிய காங்கிரஸ் அதன் முதலாவது அமர்வை நடத்தியதும் லிபியாவை ஆட்சி செய்து வந்த தேசிய நிலைமாற்றுப் பேரவை பதவியிலிருந்து விலக வேண்டும்.

No comments: