நைஜீரியாவின் சர்ச்சைக்குரிய ப்ளேட்டோ மாநிலத்தின் ஜொஸ் நகரைச்
சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த இரண்டு நாட்களாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் இரண்டு
பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 58 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். 300 க்கும் அதிகமானோர் அந்த இடங்களிலிருந்து இடம்பெயர்ந்திருக்கின்றார்கள்.
இந்தத் தாக்குதல்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் யார் என்பது பற்றிய
விபரத்தை அதிகாரிகள் வெளியிடவில்லை. நைஜீரியாவின் மத்திய பகுதியில் அமைந்து;ள ப்ளேட்டோ மாநிலம் முஸ்லிம்களை பெரும்பான்மையாகக்
கொண்ட வடக்குப் பகுதியையும், கிருஸ்தவர்களை பெரும்பான்மையாக் கொண்ட தென் பகுதியையும் இணைக்கும் மாகாணமாகும்.
2010
ஆம் ஆண்டில் இன வன்முறை காரணமாக
ஜொஸ் நகரில் சுமார் 1000 பேர் கொல்லப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment