சிரியாவுக்காக ஐக்கிய நாடுகள் மற்றும் அரபு லீக் பிரதிநிதி கொபி
அனான் டமஸ்கசிற்கு சென்றுள்ளார். ஜனாதிபதி பஷர் அல் அசாத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதே
இவரின் நோக்கம். குறிப்பாக ஆறு நிபந்தனைகளுடன் கூடிய சமாதானத் திட்டம் குறித்து இவர்கள்
பேச உள்ளதாக சிரிய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஜிஹாத் மக்திஷி தெரிவித்துள்ளார்.
கொபி அனான் இன்று மூன்றாவது தடவையாக ஜனாதிபதி அசாத்தைச் சந்திக்கவுள்ளார்.
குறிப்பிட்ட சமாதானத் திட்டத்தால் இதுவரை வன்முறையை முடிவுக்குக்
கொண்டுவர முடியாத நிலையில் இந்தத் திட்டம் குறித்து மீண்டும் பேச்சுக்கள் இடம்பெறவுள்ளன.
இந்த சமாதானத் திட்டம் தொடர்பாக மீண்டும் சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் பேச்சுவார்த்தை
நடத்துமாறு ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பேன் கீ மூன் கோரிக்கை விடுத்திருந்த
நிலையில் அனான் சிரிய ஜனாதிபதியை சந்திக்கின்றார்.
சிரியாவில் நிலைமாற்று அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டும் ஒரு
வாரத்திற்கு முன்னர் வல்லரசு நாடுகள் கோரிக்கை விடுத்திருந்தன.
எனினும், சிரியாவின் நிலையை மேலும் மோசமடையச் செய்யும் வகையில் அமெரிக்கா
ஆயததாரிகளுக்கு ஆதரவு வழங்கி வருவதாக அசாத் குற்றம் சாட்டியுள்ளார். ஆயுதக் குழுக்களுக்கு
குடைபிடிப்பது அமெரிக்காவே. அவர்களுக்கு அமெரிக்க அரசியல் புகழிடம் வழங்குகின்றது என
சரிய ஜனாதிபதி நேற்று ஜேர்மனியின் ஆர்.டி.வி தொலைக்காட்சிக்கு தெரிவித்தார்.

No comments:
Post a Comment