Tuesday, June 5, 2012

பாராளுமன்றத்தில் நேற்று


சுங்க கட்டளைகள் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதியொன்றும் உற்பத்தி வரிகள் சட்டத்தின் கீழான கட்டளையொன்றும் கலால் வரிகள் கட்டளைகள் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதி மற்றும் கட்டளையொன்றும் நேற்று பாராளுமன்றதில் நிறைவேற்றப்பட்டன. இது தொடர்பான விவாதத்தில் பதிலளித்து பேசிய பிரதியமைச்சர் கீதாஞ்சன குணவர்த்ன, ஊழியர் சேமலாப நிதியத்தின் பணம் பொறுப்புடன் நிர்வகிக்கப்படுகிறது என்றார். இந்த பணத்தில் 88 சதம் 4க்கு சதவீதமானவை திறைசேரி உண்டியல்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஜக்கிய தேசிய ஆட்சிக் காலத்தில் இலங்கை போக்குவரத்து சபையின் ஊழிய சேமலாப நிதியத்தில் இருந்து மூவாயிரம் மில்லியன் ரூபா மோசடி இடம்பெற்றதாக பிரதியமைச்சர் நினைவு கூர்ந்தார். ஒரு இலட்சத்து 75 ஆயிரம் கிலோ மீற்றர் தூரமுடைய கிராமிய பாதைகள் தற்போதைய அரசின் கீழ் அபிவிருத்தி செய்யப்படுவதாக பிரதியமைச்சர் ரோஹன குமார திசாநாயக்க தெரிவித்தார். அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் போது அரசாங்கம் சுற்றாடல் பாதுகாப்பிற்கு விசேட கவனம் செலுத்தி வருகின்றது என அவர் குறிப்பிட்டார். நாட்டினால் தாங்கிக் கொள்ள முடியாத அளவு மோட்டார் வாகனங்களின் இறக்குமதி அதிகரித்திருப்பதால் அண்மையில் வரித்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். 

No comments: