ஹம்பாந்தோட்டை மாகம் றுகுணுபுர துறைமுகத்தில் மீள் ஏற்றுமதி
மற்றும் இறக்குமதி வாகன செயற்பாடுகள் முதல் தடவையாக இன்று இடம்பெறும். இதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் 15 வாகனங்களை ஏற்றிக்கொண்டு ஜப்பானின் பிறிசியா கப்பல் நேற்று துறைமுகத்தை வந்தடைந்தது.
இந்தியாவின் சென்னை துறைமுகத்திலிருந்து மீள் ஏற்றுமதிக்கான ஆயிரம் வாகனங்களை ஏற்றிக்
கொண்டு ஆசிய சண் கப்பல் இன்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையவுள்ளது. இந்த ஆயிரம்
வாகனங்களும் மீண்டும் எதிர்வரும் 15ம் திகதி ஏசியன் லெஜன்ட் கப்பல் மூலம் அல்ஜீரியாவுக்கு
மீள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளது.
வெள்ளி மாற்றத்தை வெற்றுக் கண்களால் பார்ப்பது பொருத்தமற்றதாகும்.
இதற்காக திரையைக் கொண்ட தொலைக்காட்டியை பயன்படுத்துவது அவசியமாகும். அதிகாலை 6 மணிக்கும் 6.15
க்கும் இடைப்பட்ட நேரத்தில் இதனை
வெற்றுக் கண்களால் அவதானிக்க முடியும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீக விஞ்ஞான
பேராசிரியர் சந்தன ஜயரட்ன தெரிவித்துள்ளார். இதன் பின்னர் பார்வையிடுவதற்கு பாதுகாப்பு
நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமென அவர் வலியுறுத்தினார்.

No comments:
Post a Comment