சிரியாவின் பதற்ற நிலையை மேலும் மோசமடையச் செய்வதானது ஏகாதிபத்திய
நிகழ்ச்சி நிரலிலிருந்து விடுபடும் ஒரு செயலாகும். அமெரிக்க நலன்களுக்கு எதிராக செயற்படும்
மத்திய கிழக்குப் பிராந்திய நாடுகளின் போக்கை தணிக்கும் நோக்குடனேயே இந்த மோசமான நிலை
உருவாக்கப்படுகின்றது என அரசியல் விமர்சகர் ரல்ப் ஸ்கோன்மன் சுயடிh ளுஉhழநnஅயn தெரிவித்துள்ளார். அமெரிக்க ஏகாதிபத்தியத்தியத்தினால் ஏற்றுக்
கொள்ள முடியாத அரசாங்கங்களை மாற்றியமைப்பதே இந்த நிகழ்ச்சி நிரலாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சதித்திட்டம் சிரியாவில் மாத்திரம் இடம்பெறாது. ஈரானிலும் இடம்பெறலாம். லிபியாவிலும்
இந்த சதித்திட்டமே முன்னெடுக்கப்பட்டது. இதன் அடிப்படையிலேயே ஏகாதிபத்தியவாதிகள் சிரியா
விடயத்தில் தலையிட எத்தனிக்கின்றனர். இந்த நிலைமையை ஏகாதிபத்திய நாடுகள் ஒவ்வொரு நாளும்
ஊர்ஜிதப்படுத்தி வருவதாக அரசியல் விமர்சகர் ரல்ப் ஸ்கோன்மன் தெரிவித்துள்ளார்.
ஆரம்பத்திலிருந்தே அமெரிக்க பேச்சாளர்களும், ராஜாங்க செயலாளரும், ஐக்கிய
நாடுகளுக்கான அமெரிக்கப் பிரிதிநிதிகளும் தமது ஏக நோக்கம் சிரிய அரசாங்கத்தை கலைப்பதே
என தெரிவித்ததை அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார். சிரியாவிற்காக முன்வைக்கப்பட்டுள்ள
ஐக்கிய நாடுகளின் சமாதானத் திட்டத்தின் நம்பகத் தன்மை குறித்து கேள்வி எழுப்பியுள்ள
ஸ்கோன்மன், இந்த சமாதானத் திட்டத்தை அரசாங்கம் மீறுவதாக குற்றஞ்
சாட்டும் நோக்குடனேயே இந்த திட்டம் அமுல்படுத்தப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். இந் நிலையில், தமது ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலின் கீழ், சிரியாவில் இயங்கி வரும் பயங்கரவாதக் குழுக்களுக்கு கட்டார், சவுதி, துருக்கி, லிபியா
ஆகிய நாடுகளின் ஆதரவோடு நிதியுதவி வழங்கப்படுவதாக ஸ்கோன்மன் சாடியுள்ளார்.
இந்நிலையில், மத்திய
கிழக்கில் இஸ்ரேலின் அபிலாஷைகளை பாதுகாக்கும் வகையிலேயே சிரியாவின் ஸ்திரத்தன்மையை
சீர்குலைக்க அமெரிக்கா முயற்சிக்கின்றது என ஈரானின் சிரேஷ்ட இராணுவத் தலைவர் மேஜர்
ஜெனரல் ஹசன் பிரோசாபாதி தெரிவித்துள்ளார்.
சுpரியாவில் இடம்பெறும் கொலைகளுக்கு அந்நாட்டு அரசாங்கமே
காரணம் என மேற்கத்தேய நாடுகள் கூறுகின்றன. ஆனால், வெளிநாட்டு உதவியுடன் இயங்கும் பயங்கரவாதக் குழுக்களே இதற்கு காரணம் என அரசாங்கம்
தெரிவிக்கின்றது.
ஒரு நாட்டின் உள்ளக விடயங்களில் தலையிடுவதற்கே, அதன் இறையான்மையில், அல்லது
அரசியல் சுதந்திரத்தில் தலையிடுவதற்கோ எந்த நாட்டிற்கும் உரிமை இல்லை என ஐக்கிய நாடுகளின்
சாசனத்தின் 2 (7) மற்றும் 2 (4) உறுப்புரைகள்
வலியுறுத்துகின்றன. ஆனால், தமது அரசாங்கம் மனித உரிமைகளை மீறும் வகையில் மக்களை
கொன்று குவிக்கின்றது எனக் கூறி வெளிநாடுகளின் தலையீட்டைக் கோரினால், ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் எந்த நாடும் தலையிடலாம்.
இருப்பினும், மனிதநேய அடிப்படையில் மாத்திரம் இந்த தலையீடு அமைந்திருக்க
வேண்டும் என்பதே ஐக்கிய நாடுகள் சாசனத்தின் கூற்று.
இந்த கருத்தியல் நிலையை அடிப்படையாகக் கொண்டே அமெரிக்கா உள்ளிட்ட
மேற்கத்தேய நாடுகள் தமக்கு எதிரான நாடுகளை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபடுகின்றன. லிபியா, எகிப்து, போன்ற நாடுகளில் மக்கள் புரட்சியை ஏற்படுத்தி அவர்களிலிருந்தே
ஒரு குழுவை ஊக்குவித்து மேற்கு நாடுகளின் தலையீட்டைக் கோருவதற்கான திட்டங்கள் கடந்த
காலத்தில் மேற்கொள்ளப்பட்டன. இதன் அடிப்படையில், லிபியா, எகிப்து, யெமன், போன்ற நாடுகளில் மேற்கு நாடுகளின் தலையீட்டுடன் ஆட்சி மாற்றங்கள்
இடம்பெற்றன.
இதுபோன்ற பாணியில் ஆட்சி மாற்றத்தை மேற்கொள்ளும் நடவடிக்யையே
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முன்னெடுத்து வருவதாக ரஷ்யா கூறி வருகின்றது. சிரிய அரசாங்கத்தின்
போக்கில் எந்தக் குறையையும் காணாத ரஷ்யா அந்ந அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கி வருகின்றது
இந்நிலையில், சிரிய அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுக்குமாறு
அமெரிக்கா மீண்டும் ரஷ்யாவை வலியுறுத்தியுள்ளது. ஆனால் சிரியாவின் உள்ளக நடவடிக்கைகளில்
வெளிநாடுகளின் தலையீடு அவசியமில்லை என ரஷ்ய அரசாங்கம் கூறுகின்றது. அமெரிக்க இராஜாங்க
திணைக்களத்தின் அதிகாரியொருவர் ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சரை நேற்று மொஸ்கோவில் வைத்து
சந்தித்தபோது இது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
அமெரிக்கா தலைமையிலான மேற்கத்தேய நாடுகளின் உள்ளார்ந்த நோக்கங்களை
மத்திய கிழக்கு நாடுகளின் மக்கள் உணர்ந்துள்ள போதிலும், இந்த பதற்ற நிலையை உருவாக்க எதிர்த்தரப்பு அரசியல் கட்சிகள்
முனைப்புக் காட்டுவதால், நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படுகின்றது.
இதன் மூலம் மேற்கத்தேய நாடுகள் பயனடைந்து வருகின்றன.
மறுபுறமாக,
மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு
அப்பால் சென்று மேற்கத்தேய நிகழ்ச்சி நிரலின் கீழ் இயங்கும் அரசாங்கங்களே மத்திய கிழக்கில்
தோற்றுவிக்கப்படுவதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. அந்த வகையில், யெமனின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் தலையிடுவதை எதிர்த்து அந்நாட்டின் பல இடங்களில்
மக்கள் ஆர்ப்பாட்டம் நேற்று செய்தனர். இதற்கு ஆதரவு நல்கும் யெமன் தற்போதைய அரசாங்கம்
கலைக்கப்பட வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். இருப்பினும், இந்த விடயத்தில் ஐக்கிய நாடுகள் தலையிட்டு பிரச்சனையை சமாளிக்க
முன்வருமா என்பது கேள்விக் குறியே. பலஸ்தீனர்களுக்கு எதிரான இஸ்ரேலின் நடவடிக்கையை
கண்டிக்கும் ஐக்கிய நாடுகள் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளன. இவ்வாறான
நிலையில், தமக்கு எதிரான நாடுகள் மீது மாத்திரமே அமெரிக்கா
உள்ளிட்ட மேற்கு நாடுகள் செயற்படுவது ஐக்கிய நாடுகள் நெறிமுறையின் அமுலாக்கத்தில்; சந்தேகத்தை தோற்றுவித்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

No comments:
Post a Comment