சவுதி அரேபிய இளவரசர் நயவ் பின் அப்துல் அசீஸ் இன்று தனது 79 ஆவது வயதில் வபாத்தாகியுள்ளார். சவுதி மன்னர் அப்துல்லாவின்
ஒன்று விட்ட சகோதரரான இவர், கடந்த சில காலமாக அரபு இராச்சியத்திற்கு வெளியே அமெரிக்காவில்
சிகிச்சை பெற்று வந்தார். சவுதி ரோயல் நீதிமன்றத்தின் கூற்றத்தை தொடர்ந்து இளவரசரின்
மரணம் குறித்த செய்தியை மத்திய கிழக்கு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
முன்னாள் இளவரசர் சுல்தான் பின் அப்துல் அசீஸ், கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் நியுயோர்க் வைத்தியசாலையொன்றில்
வைத்து உயிரிழந்தார். இதனை அடுத்து நயவ் பின் அப்துல் அசீஸ் இளவரசராக பிரகடனப்படுத்தப்பட்டார்.
இவரின் ஜனாசா நாட்டுக்கு கொண்டு வந்ததன் பின்னர், நாளை புனித மக்கா நகரில் நல்லடக்கம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
No comments:
Post a Comment