Friday, April 20, 2012

தம்புள்ளை ஹை(க)ராத் ஜூம்ஆப் பள்ளிவாசல் உடைப்புச் சம்பவம் தொடர்பாக உயர் பொலிஸ் அதிகாரிகளுடன் பேச்சு


தம்புள்ளை ஹை(க)ராத் ஜூம்ஆப் பள்ளிவாசல் உடைப்புச் சம்பவம் தொடர்பாக தற்போது தம்புள்ளையில் அமைச்சர் ஏ.எல்.எம் அத்தாவுல்லா தலைமையில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்று வருகின்றது. உயர் பொலிஸ் அதிகாரிகளுடன் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக எமது காத்தான்குடி நிருபர் தெரிவித்தார். இதில் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றுள்ளார்கள். 

தம்புள்ளை ஹை(க)ராத் ஜூம்ஆப் பள்ளிவாசல் பேரினவாத சக்திகளால் உடைக்கப்பட்டுள்ளது. முதலில் பள்ளிவாயலில் உள்ளே இருந்த முஸ்லிம் சகோதரர்கள் பொலிசாரின் வற்புறுத்தலின் காரணமாக வெளியேற்றப்பட்டனர். அங்கே ஜும்ஆ நடைபெறவில்லை.

பின்னர் பொலிசார் மற்றும் இராணுவத்தினர் முன்னிலையில் காவி உடை அணிந்தவர்கள் பள்ளியின் உள்ளே சென்று அங்கே இருந்த சகல பொருட்களையும் உடைத்து நாசப்படுத்தியுள்ளனர். மேலும் பள்ளியையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



தம்புள்ள பள்ளிவாசலானது கிட்டத்தட்ட 60ஆண்டுகள் பழைமை வாய்ந்தத பள்ளிவாசல் என்று கூறப்படுகிறது. இந்தப் பள்ளிவாசலில் ஒவ்வொரு ஜும்மாவின் போதும் கிட்டத்தட்ட 5௦௦க்கு மேற்பட்ட முஸ்லிம்கள் தொழுகின்றார்கள். இந்தப்பள்ளியை உடைப்பதற்கு இவர்களுக்கு அப்பிரதேசத்தில் இயங்கிவரும் தனியார் வானொலி ஒன்று கடந்த சிலகாலங்களாக உதவியாக செயற்பட்டு வந்துள்ளதுடன்இ இந்தப்பள்ளியை உடைப்பதற்கு நாட்டின பலபாகங்களிளிருந்தும் ஆட்கள் வரவழைக்கப்ப்பட்டிருக்கிரார்கள்.

இந்நிலையில் பள்ளிவாசலுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளமை முன்னமே அறியப்பட்ட நிலையில் இதுதொடர்பில் ஏன் உரிய நடவடிக்கைகளை முஸ்லிம் தலைமைகள் மேற்கொள்ளவில்லையென தற்போது பரவலான கேள்வி எழுந்துள்ளது.

இவ்விவகாரத்தை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசென்று முஸ்லிம் அரசியல் தலைமைகள் உரிய  பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள தவறியுள்ளதாக பரவலாக முஸ்லிம்கள் தரப்பில் குற்றம் சுமத்தபட்டுள்ளது.

முஸ்லிம் தரப்பு ஊடகங்கள் பள்ளிவாசல் பற்றிய அச்சுறுத்தலை நேற்றும் இன்றும் முன்கூட்டியே வெளியிட்டிருந்தன. இதனை முஸ்லிம் அரசியல் தலைமைகள் கவனத்திற்கொண்டு இருக்குமாயின் அல்லாஹ்வின் இல்லம் தகர்க்கப்பட்டிருப்பதை நம்மால் தடுத்திருக்கலாம் அல்லவா..??

No comments: