யுத்த நடவடிக்கைகளுக்கு எதிரான நூற்றுக்கணக்கான இஸ்ரேலியர்கள் இன்று டல் எவிவ் (Tel Aviv) நகரில் ஆர்ப்பாட்டம் செய்திருக்கின்றனர். அணுசக்தி திட்டத்தை காரணமாக காட்டி ஈரான் மீது இராணு தாக்குதலை மேற்கொள்ள முனையும் இஸ்ரேல் அரசுக்கு எதிராக குரல் எழுப்பும் வகையில் இந்த இஸ்ரேலிய மக்கள் ஆர்ப்பாட்டம் செய்திருக்கின்றார்கள்.
ஈரான் மீதான அழுத்தங்கள் மத்தியக்கிழக்கு பிராந்தியம் முழவதும் யுத்தம் ஏற்பட காரணமாக அமையலாம் என்றும் இதன் தாக்கம் உலகம் முழவதையும் பாதிக்கலாமென்றும் யுத்த நடவடிக்கைகளுக்கு எதிரான இஸ்ரேலியர்கள் கருதுகின்றனர்.
பேஸ் புக் சமூக வலைத்தளம் மூலமாக ஈரானுக்கு ஆதரவு திரட்டும் பணியைத் தொடர்ந்து இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருக்கின்றது. ஈரானுடன் யுத்தம் செய்து குண்டு வீசி தாக்குதல் நடத்த வேண்டாம். பேச்சுவார்த்தை நடத்துங்கள் என்ற வாசகங்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்லாயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் அந்த பேஸ் புக் வலைத்தளத்தில் தமது கருத்தை வெளியிட்டிருக்கின்றனர்.

No comments:
Post a Comment