Saturday, July 9, 2011

மலேஷியாவில் ஆர்ப்பாட்டம் நடத்திய 644 க்கும் மேறபட்டோர் கைது..



தேர்தல் சீர்திருத்தங்களை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி இன்று மலேஷியாவில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கோலாலம்பூரில் கூடிய 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்த ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்காக பொலிசார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை பிரயோகித்தனர். இதனை அடுத்து 644 பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.
எதிர்க்கட்சியின் ஆதரவுடன் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டமே மலேஷியாவில் பல வருடங்களின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பாரிய ஆர்ப்பாட்டமாக கருதப்படுகின்றது. பிரதமர் நஜிப் ரசாக்கின் கூட்டணி அரசாங்கத்திடம் இவர்கள் தேர்தல் சட்டங்களை நியாயமான முறையில் திருத்தியமைக்குமாறு வலியுறுத்தியிருக்கின்றனர். அடுத்த வருட நடுப்பகுதி அளவில் அங்கு பொதுத் தேர்தல் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில் அங்கு இந்த ஆர்ப்பாட்டம் வெடித்திருக்கிறது.

No comments: