Sunday, April 7, 2013

தெலுங்கு மக்களும் எமது நாட்டில் இருக்கின்றார்கள்


தமிழ் மக்களைப் போன்றே தெலுங்கு மக்களும் எமது நாட்டில் எங்களோடு இருக்கின்றார்கள். ஆனால், அவர்கள் பற்றி பெரும்பாலானவர்களுக்கு தெரியாது

இலங்கையில் தெலுங்கு மக்கள் வாழும் பெரியளவிலான குடியிருப்புப் பகுதிதான் குடாகம..

மகாவலிக் குடியிருப்பு உருவாவதற்கு முன்னரே குடா கும்புக்வௌ கிராமத்தில் வாழ்ந்து வந்த தெலுங்கு மொழி பேசும் மக்கள், அதன் பின்னர் தம்புத்தேகம பெந்திவௌ குளத்திற்கு அருகிலுள்ள குடாகமவில் குடியேற்றப்பட்டார்கள். இவர்களுக்கு விவசாயம் செய்வதற்கு ஏற்ற வகையில் காணிகள் கூட வழங்கப்பட்டன. இப்போதும் கூட 350 தெலுங்கு மக்கள் குடாகமவில் வசித்து வருகின்றார்கள்..

தெலுங்கு மக்கள் குரங்காட்டும் தொழிலையே தமது பாரம்பரைத் தொழிலாக செய்து வந்தனர். அவர்களின் பிள்ளைகளும் கல்வி கற்பதில் அந்தளவுக்கு ஆர்வம் காட்டுவதில்லை. தொழில் செய்வதற்கும் விரும்புவதில்லை. சில சமயங்களில் ஏனைய பிரதேசங்களுக்கு சென்று பத்திரைகைகளையும், புத்தகங்களையும் விற்பனை செய்கின்றார்கள்.

பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் குடாகமவில் உள்ள தெலுங்கு மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். கல்வி, சுகாதாரம், போக்குவரத்து போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் போதிய கவனிப்பின்றி இவர்கள் வாழ்ந்து வருகின்றார்கள்.

தெலுங்கு மக்கள் வாழ்ந்து வரும் மற்றுமொரு பிரதேசம்தான் அம்பாறையிலுள்ள அலிகம்பே.. இவர்கள் தெலுங்கு மொழிக்கு மேலதிகமாக தமிழ், சிங்களம், ஹிந்தி ஆகிய மொழிகளையும் பயன்படுத்துகின்றனர்.

கோத்திர தலைவரின் தலைமையில் சபைக் கூட்டம் நடந்ததன் பின்னர், அவர்கள் தமது பிளைகளுடன் ஒவ்வொரு இடமாக சென்று வருவார்கள். இதன்போது, அந்தப் பிள்ளைகளுக்கு சரியாக பாடசாலைக் கல்வியையும் பெற முடியாத நிலை ஏற்படுகின்றது.

தற்கால சமூகக் கட்டமைப்புக்கு ஏற்ற விதத்தில் தம்மை நெறிப்படுத்திக் கொள்ளும் சவாலை இந்த தெலுங்கு மக்கள் எதிர்கொண்டுள்ளனர். ஆனால், சமூக ஒருமைப்பாடு பற்றி சிந்தித்தால், அவர்களைக் கீழ்த்தரமாக பார்க்க முடியாத நிலை காணப்படுகின்றது.

No comments: