Sunday, July 1, 2012

கரம் மாறிப் போவதேன் பைங்கிளியே


முப்பொழுதும் முயற்சிக்கிறேன்
உன் முகம் மறப்பதற்கு..

முடியவில்லை..தொடர்கிறது
என் நிழலாய் உன் நினைவு..

கருத்தரித்த கனவுகளால்
உறக்கத்திலும் உலறுகின்றேன்..

கற்பனை எங்கிலும்
கற்பகக் கன்னி நீ

கள்ளச் சிரிப்பிலே எனை
கொள்ளையடித்தவள்.
என் வெள்ள மனதிலே
வைரவேர் ஊன்றியவள்..

முழைத்துப் போனதால்
தலைநீட்டப் பார்க்கிறதே
தழைத்த என் காதல்

சுரம் மாறி
வார்த்தை தடுமாறி
கதைபேச நினைக்கையிலே
மனம் மாறி நீ
கரம் மாறிப் போவதேன் பைங்கிளியே !

No comments: