சர்வதேச சுற்றாடல் மாநாடு பிரேசிலின் ரியோடி
ஜெனரியோ நகரில் இன்று ஆரம்பமாகும். 20வது தடவையாக நடைபெறும் இந்த மாநாடு ரியோ-ப்ளஸ் ருவன்ரி
என பெயரிடப்பட்டுள்ளது.
நிலையான அபிவிருத்தியும் வறுமையை ஒழிப்பதற்கான
பசுபை பொருளாதார முறையும் என்பது இம்முறை இந்த மாநாட்டின் தொனிப்பொருளாகும். நிலையான
அபிவிருத்திக்கு நிறுவன ரீதியான சட்டகத்தை வரைதல் என்ற தொனிப்பொருளின் கீழ் அங்கு கலந்துரையாடப்படவுள்ளது.
கியுபாவிற்கான விஜயத்தை முடித்துக்கொண்டு
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த மாநாட்டில் பங்குபற்றுவதற்காக பிரேசில் சென்றுள்ளார்.
மாநாட்டின் பிரதான கூட்டத்தொடரில் உலக நாடுகளின்
130 தலைவர்கள் உட்பட சுமார்
50 ஆயிரம் பிரதிநிதிகள்
பங்கேற்கின்றனர். ஜனாதிபதி செயற்திறன்மிக்க சுற்றாடல் திட்டத்துடன் சம்பந்தப்பட்ட பிரேரணையொன்றை
இந்த மாநாட்டில் சமர்ப்பிக்கவுள்ளார். மாநாட்டில் கலந்துகொள்ளும் உலகத் தலைவர்களை சந்தித்து
பேசுவதற்கும் அவர் எதிர்பார்த்துள்ளார். அமைச்சர்களான அனுர பிரியதர்சன யாப்பா, டலஸ் அழகப்பெரும, பிரதியமைச்சர் துமிந்த
திசாநாயக்க ஆகியோரும் ஜனாதிபதியுடன் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக செல்கின்றனர்.

No comments:
Post a Comment