உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் குழந்தைகளுக்கான
19 வகைப் பால்மாக்களின்
விலைகள்; குறைக்கப்பட்டுள்ளன.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்
அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கருத்து வெளியிடுகையில், குழந்தை பால் வகைகளை
விற்பனை செய்யும் உள்நாட்டு மற்றும் சர்வதேச கம்பனிகள் அதிக லாபம் பெறுவதாக குறிப்பிட்டார்.
இதனால் இந்தப் பால்மாக்களின் விலை மட்டங்கள் குறித்து கண்டறிந்து அவற்றின் விலைகளை
குறைப்பதற்கு ஜனாதிபதி பணிப்புரை வழங்கியிருந்தார்.
இதற்கமைய நுகர்வோர் அதிகார சபை கடந்த 6 மாதங்களுக்கு முன்னர்
பால்மா கம்பனிகளுடன் பால்மா வகைகளின் விலைகளை குறைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியது.
எனினும், அந்தக் கம்பனிகள் இதற்கு
இணங்கவில்லை என அமைச்சர் குறிப்பிட்டார். அதனைத் தொடர்ந்து குழந்தைகளுக்கான பால்மா
வகைகளின் விலைகளை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. இரண்டு ரூபாவிலிருந்து 404 ரூபா வரை பல்வேறு
விதமான பால்மா வகைகளின் விலைகள் குறைவடைந்திருக்கின்றன. நேற்று சந்தைக்கு விநியோகிக்கப்பட்ட
குழந்தை பால்மாக்களுக்கு புதிய விலை மட்டம் பொருந்தும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

No comments:
Post a Comment