நியுயோர்க் நகரில் அமைந்துள்ள ஜக்கிய நாடுகள் சபை தலைமையத்திற்கு
வருமாறு அந்த சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் விடுத்த அழைப்பை மியன்மார் எதிர்க்கட்சி
தலைவி திருமதி ஆங் சன் சூகி ஏற்றுக் கொண்டுள்ளார். மியன்மாரில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட
அரசியல் சீர்திருத்தங்களை ஜ.நா செயலாளர் பாராட்டி இருக்கின்றார்.
இவர் தற்போது மூன்று
நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு மியன்மார் சென்றிருக்கின்றார். திருமதி ஆங் சன் சூகியை
அவரது இல்லத்தில் பொதுச் செயலாளர் சந்தித்துள்ளார்.

No comments:
Post a Comment