Tuesday, August 2, 2011

சொந்தங்களை யாசிக்கும் பிச்கைக்காரன்

அவர்கள் சப்பித் துப்பிய
முந்திரிச் சக்கை நான்.
அவர்களின் தந்திர தூண்டிலில்
சிக்கிய துடிப்புள்ள மீன் நான்.

தயவின்றி தவிக்கும்
ஊதாரியாய்..
உரமிழந்த மரங்களாய்
ஊர்தூற்ற தெருவோரமாய்
உரங்கிக்க கிடக்கும்
பிச்சைக்காரன் என்பது என்பது
இன்று நான் பெற்ற புதுப்பட்டம்.

நாடிகளிருந்தும்
துடிப்புக்களை இழந்து
துடுப்பின்றி தள்ளாடும்
ஓடமாய் என் பயனம்...

நீங்கள் மதிக்கும்
அந்த செல்வந்தன்
குளிர்காயும் நெருப்பு நான்தான்...

வேர்களை துண்டித்து
வாழ நினைக்கும் மரக் கிளைகள்
அவர்கள்...
ஒரு நாள் பச்சையமிழந்து
பட்டுப் போவார்கள் என்பதை
சொட்டும் அறியாதவர்கள்.

பிள்ளைகளுக்காய்,
கைபிடித்த தாரத்திற்காய்
பாரங்களை சுமந்து
குரோதங்களை மறந்து
மாற்றான் வீட்டில்
மண்டியிட்டு வாழும்
மானுடன் நான்..

என்னை மனிதனாய் பார்க்க வேண்டாம்..
உங்கள் எச்சங்களை திண்ணு தீர்க்கும்
நண்றியுள்ள நாயாகவேனும் ஏற்றுக் கொள்ளுங்கள்..
நிம்மதியாய் கண்மூட..

அந்த சுடுகாட்டுக்கு
இந்த உடற்கூட்டை சுமந்து செல்ல வேணும்
உங்கள் தயவு வேண்டும்...

இதை பிச்சையாகக் கேட்கிறேன்..
சொந்தங்களே! நீங்கள் சம்மதிக்கா விட்டாலும்
இந்த சக்கை ஒரு நாள் உக்கித்தான் போகும்..

அன்று உங்கள் குடும்ப மானம்
சுக்கு நூறாகிப்
சிதைந்த ஓவியமாய்
சீர்கெட்டுப் போகலாம்...

இதற்காகவேணும், என்னை ஏற்றுக் கொள்ளுங்கள்..

No comments: