Tuesday, August 16, 2011

உன் ஈரம் வேண்டுமடி கண்மணி


அவள்

அந்தி பொழுதில்
நீந்தி வந்த மஞ்சல் நிலா
சிந்தை குளிரும்
ஸ்னேகம் கலந்த 
சந்தனக் காற்று..

கண் ஜாடையால்
கதை பேசி..
உதடுகளால் - என்
உணர்ச்சிகளை
கர்ப்பமாக்கியவள்..

கள்ளத்தனமாய்..
கதை வளர்த்து,
எனை வசீகரிக்கும்
காதல் மோகினி ..

நரம்புகளில் நெளிந்து
சுளியோடும் அவளின் ஸ்பரிசங்கள்
சுகமான இராப் பொழுதில்
சுதி சேர்க்கும் வார்த்தைகள்..

கருவானில் மின்னும்
நட்சத்திரமாய்
கருப்பாடை போர்த்திய அந்த
பதுமைப் பெண்..

இருட்டறைக்குள்ளும்
வெளிச்சம் காண்கிறேன் - இவள்
வெண் முகம் சிந்தித்தால்..

வேறுன்றி விருட்சமான
என் காதல் மரம்
துளிர்விட
வேணுமென்றால் உன் ஈரம்
வேணுமடி கண்மணி..

நான் பசுமையாகலாம்..
பட்டுப் போகலாம்...
அது உந்தன் முடிவில்..

No comments: