காத்திருந்து - கண்
பூத்திருந்து
ஈன்றெடுத்த கன்றுக் குட்டி நீ !
உன் துள்ளல் காண
தவமிருக்கும்
தந்தையிவன்..
பத்திரண்டு மாதங்களாய்
செத்துப் போன
சோதனைகளை
சுரண்டிப்பார்ப்பதற்கா
நீ கண் விழித்தாய்?
அழுகைக்கு அர்த்தம்
தெரியாதவன் நான்..
இன்று கவலைச்
சுடலையில் எரியும்
கற்பூரமானேன்..
என்; குருதியில்
உருவெடுத்த
பாச மலர் - அன்று
வாடி மண்ணில் புதைந்தாள்
வாழ்வின் அழகை பிடிங்கிக்; கொண்டு…
அந்தக் கருப்பு கனங்களை
கலைய நினைத்தேன்
உன்னால் ஒளி பிறக்கும்
என்றெண்ணி…
நீயோ..இருளுக்கும் மைதீட்டுகிறாய்
புலரும் பொழுதுக்கும் தீ மூட்டுகிறாய்…
புது வசந்தம் காண எண்ணி
பால் வீட்டில் ஏன் வந்துதித்தாய்
பொன் மகனே!
புன்னகை தேடி
பாசக் களத்தில்
போர் செய்கிறாள்
உன்னை பெற்றெடுத்தவள்..
அவள் ஆசைக்காவது
உன் அழுகையை நிறுத்து..
ஆனந்தப் புன்னகையால்
அகமகிழ்வி..
அவள் செத்து
உன்னைக் காப்பாள்
சிலந்திப் ப+ச்சாய்..

No comments:
Post a Comment