Tuesday, July 12, 2011

மனிதா! உன் பயணத்தின் முடிவும் வெகு தொலைவில் இல்லை

ஓடும் நதிகளே!
ஒரு நாள் நீங்களும் ஓரிடம்
ஒதுங்கித்தான் ஆக வேண்டும்..

கடின மலை> இலகு மணல்
இளம் தளிர்> அடர்ந்த காடு.
கூலாங்கல்..

இப்படி நீ எதைத் தொட்டாலும்
ஒரு நாள் நிலத்தைக் கடந்துதான் ஆகவேண்டும்..

நீ தொடும் பொருட்கள்
அது உனக்கு சொந்தமானதல்ல..
நாம் வெறும் ஜடங்கள்தான்..

இறைவனின் தொலை கருவியில்
இயங்கும் மானுடா..
கட்டுப்பாட்டை இழந்து எம்மால் வாழலாமோ?

அந்த தொலை கருவியில்
ஓர் ஆத்மாவினுடைய இணைப்பு
துண்டிக்கப்பட்டு விட்டதாய் ஒரு செய்தி.
நதியாய் தாவி தடைகள் பல தாண்டிய
நம் பரீன் நானா காலமானாராம்..

அவரின் நிலத் தொடர்பு
அருந்து போனது..
நினைவுகள் மாத்திரம்
நம்மில் எச்சங்களாய் படிந்திருக்கும்..

மனிதா! உன் பயணத்தின்
முடிவும் வெகு தொலைவில் இல்லை..

No comments: