லிபியத் தலைவர் முஅம்மர் கத்தாபியின் ஆட்சியை கவிழ்ப்பதற்காக போராடி வரும் கிளர்ச்சியாளர்களின் ஆதிக்கத்திற்கு சர்வதேச நாடுகள் தூபமிட்டுள்ளன.
நேற்று துர்க்கித் தலைநகர் இஸ்தான்பூலில் ஒன்றுகூடிய சர்வதேச லிபிய தொடர்பு குழு பெங்காசியை தளமாகக் கொண்டு இயங்கும் கிளர்ச்சியாளர்களின் தேசிய மாற்றுப் பேரவையை ஏக சட்டபூர்வ ஆளும் அதிகார தரப்பாக ஏற்றுக் கொண்டது.. லிபிய சர்ச்சை குறித்து கவனம் செலுத்தப்பட்ட இந்தக் கூட்டத்தின் இறுதியில் கூட்டறிகை;கை ஒன்று வெளியிடப்பட்டது.
இதன்படி, சுமூகமான ஆட்சி மாற்றத்தை உறுதி செய்வதற்காக இடைக்கால அரசாங்கம் ஒன்றை நிறுவுவதற்கு சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பும் முயற்சி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. பகிரங்கமாக அறிவிக்கப்படும் நடைமுறைகளுக்கு அமைய லிபியத் தலைவர் கத்தாபி ஆட்சியை துறக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 29 ஆம் திகதி நடைபெற்ற லன்டன் மாநாட்டில் வைத்து லிபிய தொடர்புக் குழு நிறுவப்பட்டது. லிபியாவில் இடம்பெறும் கிளர்ச்சியை தீர்க்கும் வகையில் சர்வதேச சமூகத்தின் முயற்சிகளுக்கு அரசியல் ரீதியில் வழிகாட்டுவதற்காக இந்த குழு நிறுவப்பட்டது. இதில் 30 க்கும் மேற்பட்ட அரசாங்கங்களின் பிரதிநிதிகளும் , நேட்டோ, ஐரோப்பிய ஒன்றியம், அரபு லீக் போன்ற பிராந்திய அமைப்புக்களின் பிரநிதிகளும் உள்ளடங்குகின்றனர்.
சர்வதேச லிபிய தொடர்புக் குழுவினால் இந்த லிபிய தேசிய மாற்று பேரவை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளமையானது வெளிநாடுகளில் முடக்கப்பட்டுள்ள லிபிய அரசின் சொத்துக்கள் விடுவிக்கப்படும் என்பதாகும். இந்த சொத்துக்களின் பொறுப்பை இதன் பின்னர் தேசிய மாற்றுப் பேரவை வகிக்கும் என பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் அலைன் ஜூப்பே தெரிவித்துள்ளார். லிபியாவுக்கான ஐக்கிய நாடுகளின் விசேட தூதுவராக அப்துல்லா அல் காத்திபை நியமிப்பதற்கும் தாம் நடவடிக்கை எடுத்திருப்பதாக அவர் கூறினார். இவர் அல் கத்தாபியின் ஆட்சிக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் மத்தியஸ்தம் வகிக்கும் ஏக பிரதிநிதியாக கருதப்படுவார்.
இஸ்தான்பூலில் நடைபெற்ற கூட்டத்தில் நேட்டோ அமைப்பின் செயலாளர் நாயகம் என்டர்ஸ் பொக் ரஸ்மசன் ( யுனெநசள குழபா சுயளஅரளளநn). அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஹிலரி கிளின்டன், ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் கத்தரின் அஸ்தன், பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹெக் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment