Saturday, July 23, 2011

சமதாதான தேசம் சிதைந்தது.

சமாதானத்தை நினைவுகூறும் நோர்வே நாட்டிலும் வன்முறை துளிர ஆரம்பித்துள்ளது. சமாதானம் பேணி சமாதானத்திற்காகவே மத்தியஸ்தம் வகிக்கும் நாடாகத்தான் நாம் இதுவரை நோர்வே நாட்டை விளங்கி வைத்திருந்தோம். இந்த நிலை தற்போது மாறிவிட்டது. நோர்வே பிரதமர் ஜென்ஸ் ஸ்டொல்ட்டன்பேர்கின் தெரிவிக்கையில், சுவர்க்க பூமியாக இருந்த தமது நாடு நரகமாக மாறியுள்ளதென வர்ணித்துள்ளார்.

அன்மையில், நடைபெற்ற சாக் கூட்டமொன்றில் பயங்கரவாதம் ஒரு புற்றுநோய் என இந்தியப் பிரதமர் காலநிதி மன்மோகன் சிங் தெரிவித்தது உண்மையாகி விட்டது. இந்த நோய் ஆரம்பத்திலேயே தடுக்கப்படாவிட்டால், அதன் தாக்கம் உடம்பின் எல்லாப் பாகங்களுக்கும் பரவி விடும். அதுபோலத்தான் பயங்கரவாதமும் என்று தெளிவுபடுத்தியிருந்த இந்தியப் பிரதமர், இந்த அச்சுறுத்தல் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

இதன்படி, தற்போது நோர்வேயில் இடம்பெற்றிருக்கும் வன்முறைத் தாக்குதல்களை தொடராமல் இருப்பதற்கு அந்நாடு கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கின்றது. பிராந்திய நாடுகளும் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்சனையை சரியாக தீர்க்காவிட்டால், அது மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு சவாலாக அமைந்து விடும்.

நோர்வேயில் நேற்று மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதல் மற்றும் துப்பாக்கிப் பிரயோகங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 91 ஆக அதிகரித்துள்ளது. இந்தத் தாக்குதலை மேற்கொண்டிருப்பது ஒரு படையணியோ கும்பலோ அல்ல. பொலிஸ் சீறுடையில் வந்த 32 வயதுடைய நோர்வே என்டஸ் பேரிங் ப்ரைவிக்
 என்ற நோர்வே நாட்டவர்தான். இவர் உட்டோயா (ருவழநலய) தீவில் வைத்து கைது செய்யப்பட்டிருக்கின்றார். தனிப்பட்ட ஒரு மனிதனால், இவ்வாறு பாரிய விளைவை ஏற்படுத்தக் கூடிய தாக்குதலுக்கான பின்னணி என்ன என்பது குறித்து தற்போது ஆராயப்பட்டு வருகின்றது.



தன்னைப் பற்றி விபரித்துள்ள குறிப்பிட்ட சந்தேக நபர் அன்டசன், தான் வலது சாரி கிருஸ்தவத்தை விரும்பும் ஒரு கிருஸ்தவர் என தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் இந்தத் தாக்குதல்களின் பின்னணியில் இஸ்லாமிய தீவிரவாதிகள் இருந்திருக்கலாம் என டென்மார் மற்றும் இத்தாலி ஊடகங்கள் ஊகம் வெளியிட்டிருந்தன. ஆனால், இது ஒரு தனிப்பட்ட கிருஸ்தவப் பிரஜையால் மேற்கொள்ளப்பட்ட தாக்குலாக அமைந்திருப்பதால், இதற்கான பின்னணி குறித்து விரிவாக ஆராய வேண்டியுள்ளது. உள்நாட்டில் தம்மை வளர்த்துக் கொள்ளும் இவ்வாறான கிளர்ச்சியாளர்கள் பின்னர் பல இடங்களிலும் தாக்குதல் நடத்துவது சாதாரண விடயம்தான். குறிப்பாக சொல்லப்போனால். இதேபோன்ற ஒரு தனிப்பட்ட நபர்தான் 1995 ஆம் ஆண்டு அமெரிக்காவை அதிர வைத்தவர். திமொத்தி மெக் வெய் என்ற அந்த தனிப்பட்ட நபர் ஒக்லஹோமா நகரில் நடத்திய ட்ரக் குண்டுத் தாக்குலில் 168 பேர் கொல்லப்பட்டார்கள்.

ஒஸ்லோவில் தாக்குதல் நடத்தியிருப்பவர் தனது 20 ஆவது வயதிலிருந்தே வலது சாரி கொள்கையில் தீவிரமாக செயற்பட்டவரென இவரின் நண்பரொருவரை மேற்கோள்காட்டி ஒஸ்லோவின் நாளிதழான ஏநசனநளெ புயபெ தெரிவித்துள்ளது. அன்டசன் என்ற இந்த தீவிர செயற்பாட்டாளர் கடுமையான தேசியவாத கருத்துக்களை தனது இணைய நேரடி விவாதங்களில் வெளியிட்டு வந்ததாக அந்தப் பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது. பல் கலாச்சார வாதத்தை எதிர்ப்பவராக இவர் இருந்துள்ளார். 

இதனடிப்படையில். இவர் ஒரு தேசியவாத அடிப்படைவாதி என்று வர்ணிக்கப்படுகின்றது. ஆனால், இவர் மாத்திரம்தானா இதில் சம்பந்தப்பட்டுள்ளார் அல்லது இவருடன் இதே கருத்தியலைக் கொண்ட வேறு யாரும் உள்ளார்களா என்பது குறித்து ஆராய வேண்டிய தேவைப்பாடு ஒஸ்லோ அதிகாரிகளுக்கு உள்ளது. 

அன்டசன் என்ற இந்த தீவிரப் போக்குடையவர் விரல் நீட்ட முனைந்திருப்பது நோர்வேயின் தொழில் கட்சி தலைமையிலான ஆளும் கட்சி மீது. இந்தக் கட்சி சமூக ஜனநாயக அரசயில் கட்சியாக விளங்குகின்றது. 1930 ஆம் ஆண்டிலிருந்து இந்தக் கட்சி அங்கு அனைவருக்காகவும் பாடுபடுவோம் என்ற பல் கலாச்சார வாத தொனிப்பொருளின் கீழ் இயங்கி வந்துள்ளது.
இந்தக் கட்சியை பிரதிநிதித்துவப் படுத்தும் இளைஞர் முகாமொன்றை இலக்கு வைத்து அன்டசன் என்ற அந்த நபர் நடத்தியதாகக் கூறப்படும் துப்பாகிப் பிரயோகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 84 ஆக உயர்ந்துள்ளது. இந்தத் தாக்குதலை நடத்துவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னர் பிரதமர் அலுவலகத்திற்கு அருகில் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 7 பேர் கொல்லப்பட்டார்கள். இந்த நபருக்கு சொந்தமான பசளைக் கம்பனியிலியே இதற்கான குண்டு தயாரிக்கப்பட்டுள்ளதாக நோர்வே ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

இந்தத் தாக்குதல்களை இந்த தனிமனிதர்தான் மேற்கொண்டிருப்பார் என்றால், இவருக்கு இந்த பலம் எங்கிருந்து வந்தது. இது அவரின் தனிப்பட்ட நடவடிக்கையாக இருந்தால், இதுபோன்ற இளைஞர்கள் எதிர்காலத்திலும் உருவாக மாட்டார்கள் என்பதற்கு மேற்கு ஐரோப்பிய நாடுகள் வழங்கும் உத்தரவாதம் என்ன? இதற்காக அந்த நாடுகள் எடுக்கும் நடவடிக்கை என்ன? இவைதான் இன்று எழுப்பப்படும் கேள்விகள்.

No comments: