கற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை எதிர்வரும் நவம்பர் 15 ஆம் திகதி வெளியிடப்படலாம் என தான் எதிர்பார்ப்பதாக இலங்கை வந்துள்ள பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் லியன் பொக்ஸ் தெரிவித்துள்ளார். லக்ஷ்மன் கதிர்காமர் ஞாபகர்த்த உரையில் அவர் இதனை தெரிவித்தார். கருத்துச் சுதந்திரம், பொறுப்புக்கூறும் தன்மை, சாதகமான மனோநிலைகள் என்பன யுத்தத்தின் பின்னர் விருத்தி காண வேண்டும் எனத் தெரிவித்த அவர் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் இலங்கையின் இனப்பிரச்சனைக்கு ஒர் அரசியல் தீர்வு வேண்டுமென விரும்பியவர் எனக் குறிப்பிட்டார்.
திரு. லியன் பொக்ஸ் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் சந்தித்துப் பேசினார். ஆனால் அங்கு எந்த விடயங்கள் கதைக்கப்பட்டன என்பது பற்றிய விபரம் இதுவரை தெளிவாக வெளியிடப்படவில்லை.

No comments:
Post a Comment