நான்கு தசாப்தங்களின் பின்னர், தமக்குரிய ஜனாநாயகத் தலைவர் ஒருவரை
தேர்ந்தெடுக்கும் வாக்களிப்பில் எகிப்திய மக்கள் ஈடுபட்டுள்ளனர். ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான
இரண்டாம் சுற்று வாக்கெடுப்பு எகிப்தில் இன்றும் நாளையும் நடைபெறுகின்றது. முஸ்லிம்
சகோதரத்துவ அமைப்பின் சுதந்திர மற்றும் நியாயக் கட்சியின் வேட்பாளர் முஹம்மத் முர்ஷியும், முன்னாள் பிரதமர் அஹ்மத் ஷபீக்கும்
இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். 50 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் இதில் வாக்களிக்கத்
தகுதி பெற்றுள்ளார்கள். ஆரம்ப முடிவுகளின் படி வெளிநாட்டவர்களின் வாக்களிப்பில் முர்ஷி
78 சதவீதமான வாக்குகளைப் பெற்று முன்னிலை வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது எகிப்தை ஆட்சி செய்து வரும் ஆளும் ஆயுதப் படைகளின் மீயுயர்
பேரவை, இந்தத் தேர்தலில் வெற்றி பெரும் வேட்பாளரிடம் அடுத்த மாதம் முதலாம் திகதிக்குள்
அதிகாரத்தை கையளிக்க இணக்கம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், இராணுவக் கவுன்சிலின் பிரகடனப்படுத்தப்படாத
வேட்பாளராக ஷபீக் இருக்கலாம் என பல எகிப்தியர்கள் அஞ்சுகின்றனர். அதேபோல், தேர்தலை கண்காணிப்பதற்காக இராணுவ
ஆட்சியாளர்கள் நியமித்துள்ள தேர்தல் குழு ஷபீக்கிற்கு ஆதரவாக தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்கலாம்
என்றும் எகிப்தியர்கள் ஐயம் கொள்கின்றனர்.
இவ்வாறான கருத்து நிலை வேறூன்றியிருப்பதைத் தொடர்ந்து ஹ_ஸ்னி முபாரக்கின் உதவியாளராக இருந்து
ஷபீக் தேர்தலில் போட்டியிடக் கூடாது என வலியுறுத்தி எகிப்து முழுவதும் ஆர்ப்பாட்டங்களும்
இடம்பெற்றுள்ளன.
எவ்வாறாயினும், பாராளுமன்றம் அங்கீகரித்த அரசியல் ஒதுக்கச் சட்டம்
அரசியலமைப்புக்கு உட்பட்டதல்ல என்பதால், ஷபீக்கிற்கு இந்த தேர்தலில் போட்டியிட மீயுயர் அரசியலமைப்பு
நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
இதேவேளை, நாட்டின் பாராளுமன்றத்தை இராணுவம் களைத்திருப்பதை எகிப்திய முஸ்லிம் சகோதரத்துவ
அமைப்பு நிராகரித்து;ளளது. இது தொடர்பில் உடனடியாக சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என அந்த அமைப்பு
கோரியுள்ளது.

No comments:
Post a Comment