Wednesday, September 21, 2011

உருக்கொடுப்பாய் கண்மணியே!

உன்னோடு நான் பேச
உண்டாகும் பேரின்பம்
என்னாளும் தர வேண்டும்.

கண்ணாளன் நான்
உன்னை கலங்காமல்
காத்திடுவேன் 

கரைந்தோடும் மெழுகெந்தன்
வாழ்க்கை..
அதை நிறம் தீட்டி
ஓவியமாய்
உருக் கொடு கண்மணியே!

உன் குரல் நான் கேட்க
உண்டாகும் ஒளிவெள்ளம்
உடம்பெங்கும் பாயுதடி
தேனாறாய்.

மான்குட்டி நீ அன்று
விழி பதுங்கி பார்த்ததிலே
விழுந்த இவன் இதயம்
இன்னும்
எழவில்லை ஏனோ?

கருவிழிப் பதுமையே!
பெரு வெளி பரப்பெங்கும்
உன் விம்பம் காண்கிறேன்..
உவகையுடன் ஓடிவந்து
உனை நான் பார்க்கையிலே
பின்னோக்கிப் போகின்றாய்.
கானலென சொல்லி விட்டு

காற்றிலே கலந்து என்
காதோரம் தேன் சேர்க்கும்
மெல்லிசை கீதம் நீ...
அதில் லயித்துப் 
பரவசத்தில் பிரிய வேண்டும்
என் உயிர்...


1 comment:

M.B.M.Rameez said...

Great work. This will be more helpful for future generation.
Congratulations on your success!!