Saturday, July 16, 2011

கொன்பிளிக்ஸ் டைனமிக்ஸ் இன்டர்நஷனல் அமைப்பு’ வெளியிட்டுள்ள அறிக்கைக்கு இலங்கை ஆட்சேபனை

அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் ‘கொன்பிளிக்ஸ் டைனமிக்ஸ் இன்டர்நஷனல் அமைப்பு’ வெளியிட்டுள்ள அறி;க்கையில் இலங்கை சிறுவர்கள் படையில் சேர்த்துக்கொள்ளப்பட்டமை மற்றும் அவர்களுக்கு ஆயுதம் வழங்கியமை தொடர்பான யதார்த்தம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர பிரதிநிதி கலாநிதி பாலித கொஹண தெரிவித்துள்ளார்.

கடந்த 12ம் திகதி பாதுகாப்புச்சபையில் நடைபெற்ற விவாதமொன்றில் அவர் இது தொடர்பாக கருத்து வெளியிட்டார். இந்த அறிக்கையை வெளியிட்ட அமெரிக்க அமைப்பு, கசப்பான கடந்த காலத்தை மறந்து சிறுவர்கள் படையில் சேர்த்துக் கொள்ளப்பட்டமைக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வது மீதான பிரச்சினையை அரசியல் மயப்படுத்துவதற்கு முயற்சித்திருப்பதாக கூறியுள்ளார். இலங்கை அரசாங்கம் எல்ரிரிஈ அமைப்பை தோற்கடித்ததன் பின்னர், நாட்டில் ஐக்கியம் ஏற்பட்டுள்ளது. சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள நிகழ்ச்சித் திட்டத்தை சீர்குலைக்க முயற்சிக்கும் சில சர்வதேச தரப்பிற்கு இந்த அறிக்கை பிழையான தகவல்களை வழங்குவதாக கலாநிதி கொஹண குறிப்பிட்டுள்ளார். 

யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் எல்ரிரிஈ அமைப்பினால் பெரும் எண்ணிக்கையான சிறுவர்கள் அவர்களின் படை நடவடிக்கைகளுக்காக சேர்த்துக் கொள்ளப்பட்டனர். இலங்கை அரசாங்கம் எப்போதும் ஆயுத மோதலுடன் சம்பந்தப்பட்ட குழுக்களிடம் வன்முறையைக் கைவிட்டு ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு ஊக்குவித்ததாக திரு.கொஹண சுட்டிக்காட்டினார்.

No comments: