இந்த உறுப்பினர் இதற்கு முன்னர், கொலம்பியாவின் ‘பார்க்’ கிளர்ச்சியாளர்களுக்கும் உதவி செய்தவர் என தெரியவந்துள்ளது. அந்த கிளர்ச்சி அமைப்பின் பல தலைவர்களை பிடிப்பதற்காக கொலம்பிய ராணுவம் மேற்கொண்ட தாக்குதலின் போது பயங்கரவாத தலைவர்களிடம் இருந்த கணனி வன்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இவற்றில் இந்த காங்கிரஸ் உறுப்பினர் அவர்களுக்கு வழங்கிய ஆதரவு பற்றிய பல விடயங்கள் உள்ளடங்கியிருந்தன. 2008ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட இந்த ராணுவ நடவடிக்கையில் ‘பார்க்’ கிளர்ச்சி அமைப்பின் தலைவரான ரவுல் ரேஸ் உள்ளிட்ட இரண்டு பிரதானிகள் உயிரிழந்தனர்.
இந்த காங்கிரஸ் உறுப்பினரைப் பயன்படுத்தி, இலங்கையின் வடக்கு கிழக்கை பிரிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய தேவை அமெரிக்காவில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களிடம் இருந்தது. குறிப்பாக கொசோவோ போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தி, சர்வதேச நீதிமன்றத்திற்கு இலங்கை தலைவர்களை அழைத்துச் செல்வது எல்ரிரிஈ அமைப்பிற்கு சார்பானவர்களின் நோக்கமாக உள்ளதென ‘ஏசியன் ரிபியுன்’ இணையத் தளம் தெரிவித்துள்ளது.
இந்த மெகோவன் என்ற காங்கிரஸ் உறுப்பினர் கொசோவோ பிரச்சினையின் போது பிரிவினைவாதத்திற்காக குரல் எழுப்பியவராவார். பல சந்தர்ப்பங்களில் ஜனநாயக ரீதியான அரசாங்கங்களுக்கு எதிராக இவர் செயற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
No comments:
Post a Comment